சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”

சாரு நிவேதிதா என்கிற …….
பச்சையாகச் சொல்வதானால்
“அயோக்கியத்தனம்”

நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர்  சாரு
நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில்
( http://www.yatrigan.wordpress.
com ) ஒரு இடுகை வந்திருந்தது.
கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை !

நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும்
இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு
மனிதனாக,சில விஷயங்களை இங்கு  பதிவு
செய்ய விரும்புகிறேன்.

முதலிலேயே ஒரு கருத்து.
ஒரு வாசகர் – “நான் உங்கள் வலையில்
நித்யானந்தாவைப் பற்றி கடவுள் அவதாரம்
என்கிற அளவிற்கு நீங்கள் புகழ்ந்து எழுதி
இருந்ததை நம்பி நானும் அதில் அதிக அளவு
பணத்தையும் நேரத்தையும் செலவழித்தேன்.
என் மடலுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை
உங்களுக்கு உள்ளது” என்று எழுதி இருக்கிறார்.
அதற்கு சாரு அளித்துள்ள பதில் –
“who is paying for me ?.
everything here in my site is
a free fuck.  pl dont read
this site.”

இதை அப்படியே தமிழ்ப் படுத்த நான்
விரும்பவில்லை – நாகரீகமாகச் சொல்ல
வேண்டுமானால் -“நான் எழுதியுள்ளதை
ஓசியில் தானே படிக்கிறீர்கள் – இனி நீங்கள்
என் எழுத்தைப் படிக்கத் தேவை இல்லை”
என்கிறார்.

இங்கு அவருடைய எழுத்தை ஓசியில் படிப்பதாக
எழுதி இருக்கிறார். ஆனால் யாத்ரிகனில்
ஆன்லைன் பிச்சை என்று சொல்லி இருந்தது
அல்லவா ?  அது  இது  தான் –

சாருவின் வலைப்பதிவில் பண உதவி கோரி
அவரே விடுத்துள்ள வேண்டுகோள் கீழே –

“we appreciate your donations to
keep this site up and running.
Thanks to all the patrons who have
supported us in the past, looking
forward to your support in the
future too.

Donations can be made via

ICICI  account No. 602601 505045
Name:   K. ARIVAZHAGAN

T. Nagar Branch, Chennai”

இந்த வேண்டுகோளை ஏற்று பண உதவி புரிந்த
என் போன்ற பல வாசகர்களுக்கு அவரைக்
கேள்வி கேட்கும் உரிமை இருப்பதை அவரால்
தட்டிக்கழிக்க முடியாது.

நித்யானந்தா விவகாரத்திற்குப் பிறகு அவர் எழுதி
வரும் கட்டுரைகளிலிருந்து  சில பகுதிகள் கீழே –

“வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது
விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.  ஆம்,
விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி
அடையவில்லை.
(நாம் அனைவருமே அதிர்ச்சி அடைந்தபோது
அவரை ஆண்டவனின் அவதாரமாகவே அவரது
வலையில் சித்தரித்திருந்த சாரு அதிர்ச்சி
அடையவில்லையாம் ! )

நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ
மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர்
பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு
எது பற்றியும் சுயமான  சிந்தனையே இல்லை.
நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக்
கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.”

(இங்கு அவர் தன்னைப்பற்றியே  விமரிசனம்
செய்துக்கொண்டிருப்பது போல் தோன்றவில்லை ?)

“மேலும், பல முன்னாள் நீலப்பட நடிகைகள்
வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில்
வலம் வந்து கொண்டிருந்தனர்.அது எனக்கு ஒருவித
அசூயையை அளித்தது.

இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை
நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து
கொண்டிருந்தன.

இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளாகவே இருந்ததால்
நித்யானந்தரிடமிருந்து சிறிது சிறிதாக விலக
ஆரம்பித்தேன்.  அவருடைய நூலின்
மொழிபெயர்ப்பிலிருந்து என்னை டிசம்பரிலேயே
விடுவித்துக் கொண்டேன்.”

(அவருக்கு டிசம்பரிலேயே தெரிந்து விட்டதாம் !
ஆனாலும் பிப்ரவரியில் கூட புகழ்ந்துக் கொண்டிருந்தார்)

“இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும்
ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள்.
நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது.
அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள்
பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய
புத்தகங்கள் 300 இருக்கும்.  அத்தனையும் நம்
இந்திய ஆன்மீகத்தின் சாரம்.  கீதைக்கு அவர்
எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம்.”

(இப்போதும் நித்யானந்தர் அற்புத சக்தி படைத்தவர்
தான்  என்று சாதிக்கிறார் )

“நான் என்ன அவருடைய பிஸினஸ் பார்ட்னரா?

அடங்கொக்கா மக்கா, நித்யானந்தர் என்ற போலி
சாமியாருக்கு வந்த கெட்டதற்கும் எனக்கும் என்ன
மிஸ்டர் சம்பந்தம்?  என் இணையதளத்தில் அந்த
சாமியாரின் படத்தைப் போட்டு விட்டதால் நானும்
அந்த நபரின் கயவாளித்தனங்களுக்கு உடந்தை
என்று அர்த்தமா?”

(நித்யானந்தா மடத்திலிருந்து இவர் இதுவரை
மொழிபெயர்ப்புக்காகவும், மற்ற
விவகாரங்களுக்காகவும் வாங்கியுள்ள
உண்மையான தொகை எவ்வளவு என்பதை
வெளிப்படையாக,  கூற முடிந்தால்,
அந்த நபரின் கயவாளித்தனங்களுக்கு இவரும்
உடந்தையா இல்லையா என்பதை மற்றவர்கள்
அறிய உதவியாக இருக்கும் )

தன்னை பெரியாரிஸ்ட் என்று அழைப்பதில்
பெருமை கொள்ளும் இவர் தன் மனைவியை
அந்த போலிச்சாமியார் ஒரு தடவை தொட்டவுடன்
அவ்வளவு நாளாக இருந்த தீராத கால் வலி
காணாமல் போய் விட்டது என்றும் எழுதி
இருக்கிறார்.

தொட்டவுடன் நோயைக் காணாமல் போக்கும்
சக்தி நித்யானந்தாவிற்கு இருக்கிறது என்று
இவர் இன்னும்  நம்புகின்றாரா ?

சாருவுக்கு உள்ள  மிகப்பெரிய பலம் –
அவர் நினைப்பதை எல்லாம் அப்படியே எழுத்தில்
வடிக்கும் வல்லமை.

ஆனால் –  தன் வல்லமை  அதோடு சரி என்பதை
அவர் தெரிந்து கொள்ள வேண்டும். ஊருக்கு
நல்லது கெட்டது சொல்லவோ, எதையும்
அறிந்து, ஆராய்ந்து விமரிசனம் செய்யவோ
அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

தனக்கே புரியாத,  தன்னால் உணர்ந்து கொள்ள
முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி
எல்லாரிடமும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது
தவறு தான்.

அதை வெளிப்படையாக “ஆமாம்.எல்லாரையும்
போல் நானும் ஏமாந்து விட்டேன் ” என்று
ஒப்புக்கொள்வது தான் சரி.

அதை விட்டு விட்டு – தான் ஏற்கெனவே உணர்ந்து
விட்டதாகவும், மற்றவர்கள் தான் “மந்திரித்து
விட்ட ஆடு போல்” பின்னால் அலைந்ததாகக்
கூறுவது -பச்சையாகச் சொல்வதானால்
“அயோக்கியத்தனம்”.

முதலில் தன் வலையில் நித்யானந்தரைப் பாராட்டும்
வகையில்  பணவரவு. இப்போது அதே நபரைத்
தாக்கி கட்டுரை எழுத குமுதம் ரிப்போர்ட்டரில்
இருந்து  வரும்படி. மனசாட்சி இருந்தால் இவர்
என்ன செய்திருக்க வேண்டும் ?
தான் எந்தெந்த வகையில் நித்யானந்தாவால்
ஏமாற்றப்பட்டார் என்பதையும் தன் வலையில் தானே
உடனடியாக, விவரமாக எழுதி இருக்க வேண்டும் ?
ஏமாந்ததைக் கூட தவணைமுறையில் ரிப்போர்ட்டரில்
எழுதி வியாபாரமாக்கினால் எப்படி ?

தனக்கு மிகப்பெரிய வாசகர் கூட்டம் இருப்பதாகவும்,
தன் எழுத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும்,
தன்னைப்போல் வேறு யாராலும் எழுத முடியாது
என்றும் சாரு கற்பனை செய்துக் கொள்கிறார்.

இவரது அதிகம் புகழ் பெற்ற நாவல் இது வரை
எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கிறது ? ஐயாயிரத்தைக்
தாண்டி இருக்குமா ?

இவரது எழுத்திற்கு வரவேற்பு இருக்கிறது
என்பது என்னவோ உண்மை  தான் !
யாத்ரிகனில் சொல்வதுபோல் – அவர் மொழியிலேயே
சொல்வதானால்,  அவிழ்த்துப் போட்டு விட்டு
ஆடினால் பார்க்க ஆயிரம் பேர் வரத்தான் செய்வார்கள்.
ஆனால் வந்தவர்கள், வருபவர்கள் எல்லாரும்
பாராட்டுவதற்காக வரவில்லை. பார்த்து ரசிக்கவும்,
சிரிக்கவுமே !

இவரைப் போல் வேறு யாராலும் எழுத முடியாது
என்பது மட்டும் உண்மை தான்.

பாலுணர்வு என்பது மனித குலத்துக்கு பொதுவானது
தான்.எல்லாரும் உணர்வது தான் – ஈடுபடுவது தான்.
ஆனால் அறையில் செய்வதை எல்லாம்
அம்பலத்தில் சொல்வதை எல்லாராலும் செய்ய
முடியுமா ? அந்த மட்டில் இவர் அருகில் யாராலும்
நெருங்கக் கூட முடியாது தான் !

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படியான,
மருத்துவ ரீதியான, உளவியல் ரீதியான இன்னொரு
உண்மையையும் இங்கு கூற விரும்புகிறேன்.
பல வருடங்களாகத் தொடர்ந்து மது அருந்துவது
பாலியல் ரீதியாக ஒரு ஆண்மகனை பலவீனப்படுத்தும்
என்பதே அது.

இவர் எழுத்துக்களில், தான் இழந்தது  போதாது
என்று மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கே
காணப்படுகிறது. குடிப்பதையும், கட்டுப்பாடற்ற
வாழ்வு வாழ்வதையும், ஊக்குவிக்கும் எழுத்தை
சமூகப் பொறுப்புள்ள யாராலும் சாடாமல்
இருக்க முடியாது.

–  நான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை.
இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”

 1. marai சொல்கிறார்:

  perai ponravar avar

 2. chithiran சொல்கிறார்:

  charu sir ku ennamum unmai puriyala pola pavamngaaaaa…………..

 3. Ashiq சொல்கிறார்:

  Yes i accept this article,

  I have one time his blog, absolutely he written worst, until he don’t know what is meaning of sex . he is writing about only “LUST” . and by the way his writes seems he may be a “GAY”.

 4. NARENDRA KUMAR சொல்கிறார்:

  Let us not bother about these useless fellows.

 5. mannuchella சொல்கிறார்:

  hai sir,

  i too completely agree with u. just before few days i went to his site and read about some articles in which a lady wrote him about balancing his life. his reply was totally irritable to read. in that article he used lot of un parlimentary words he didn’t even consider that she is a women. more than that most of the things he has specified was not realistic. i don’t consider him as a writer itself.

 6. dittu சொல்கிறார்:

  Even i stopped buying anandha vikatan once they started his meaningless
  article.He is a perversioninst and proud to of that.Even his personal problems with vijay tv programmes , he made money in publishing it in a magazine.
  We should totally avoid his writings,and publishings.Even to critsize we should not read his materials which are not not worthy in a civilised society.

 7. Human Being சொல்கிறார்:

  சாரு – தமிழ் எழுத்துலக கழிவு. தமிழ் எழுத்தாளர்களில் ஆக கடைந்தெடுத்த கழிவு நீர்.
  கழிவின் மணம் விரும்புவோர் எப்பொழுதும் உளர்

 8. varshen சொல்கிறார்:

  super boss

 9. stanly சொல்கிறார்:

  good.

  a balanced at the same too critical about charu.
  I have read his book of bound articles on nithyananda ‘ sarasam, sallabam, saamiyaar’ He has thrown nithyananda to the other extreme. Once he has come to known that he is cheated he must keep quite and not publish his ignorance in a modern way. better he does not do the propaganda about ‘lust’.

 10. M.G.Bala சொல்கிறார்:

  சாருவைப் பற்றி நீங்கள் சொல்வதும் உண்மை. சாரு தன்னைப் பற்றி சொல்வதும் உண்மை. அவருடைய எழுத்தின் வசீகரத்திற்க்காக
  அவரைப் படிக்க வேண்டுமே தவிர அவரை பின்பற்றுவது எனபது
  முட்டாள்தனம். இதை அவரே ஒப்புக்கொள்வார். எழுத்தை படித்து
  பின் எழுத்தாளரை பின்பற்றுவது, படைப்பு போலவே படைப்பாளியும்
  இருப்பார் என நம்புவது தமிழனின் பலவீனம்.

 11. SugeshPathi சொல்கிறார்:

  Waste Of Time 😦

 12. NEPOLEAN சொல்கிறார்:

  TODAY I UNDERSTOOD THE REAL SIDE OF SAARU,

  THANKS FOR THE SAME, AND ALSO I WOULD LIKE TO SHARE WITH YOU
  IS, FROM TO DAY, I HAVE DECIDED MY SELF NOT TO READ HIS BOOKS ANY MORE

 13. karthik @swami jeevan nadhama சொல்கிறார்:

  my dear friend,the meaning of personality means’ mask’ that saru also had the mask.duality{ or] schizophrenia patients u don’t worry ,can u help me one thing nobody the so called god mans like nithy or any other foolish [they had the illusion of enlightenment ] if they have guts they must debate with me its a open forum in front of media, if they failed they should remove their kaavi dress and they should run

 14. ganesan சொல்கிறார்:

  எல்லார்க்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் யாரும் யாருக்கும் அடிமையாகதீங்க ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு விசயத்தை ஆயிர விதமா சொல்லுவாங்க முதல உங்கல மதிங்க உங்க அனுபவத்த பாருங்க

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.