வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)


வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-3)

பின்னர் 1944-ல்
இந்த இயக்கத்தின் பெயர்  திராவிடர் கழகம்
என்று மாற்றப்பட்டது.
பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம்
மலர்ந்து  வளரத்துவங்கியது.

இதன் முன்னர்  நீதிக்கட்சியின் சின்னமாக
சம உரிமையை குறிக்கும் வகையில்
தராசு இருந்தது.

திராவிடர்  கழகம் தோன்றியதும் சுற்றிலும்
கருப்பும், நடுவில் வட்டமாக சிவப்பும் கொண்ட
கருப்பு சிவப்பு கொடி முதன் முதலில்
அறிமுகம் செய்யப்பட்டது.கருப்பு (சமூக,
பொருளாதார) அடிமைத்தனத்தையும்,
சிவப்பு அவற்றிலிருந்து பெறவேண்டிய
விடுதலையையும் குறிப்பதாக  ஆனது.


பெரியார்  தீவிரமாக பிராம்மணர் எதிர்ப்பு,
ஜாதி,  மத, கடவுள் ஒழிப்பு பிரச்சாரங்களில்
ஈடுபடலானார்.  அவரது  கொள்கைகளும்,
பேச்சும் தமிழ்  இளைஞர்களைக்
கவர்ந்து இழுத்தன. (இதில் சில பிராம்மண
இளைஞர்களும் இருந்தனர் என்பது தான்
அதிசயம் ! )

அடுக்குமொழியிலோ, அலங்காரமாகவோ
பேசக்கூடியவர் அல்ல பெரியார் !
மிகவும்  எளியநடை –  திண்ணையில்
4 பேருடன் உட்கார்ந்துக்கொண்டு
எப்படிப் பேசுவோமோ  அதே  போல்
மேடைகளில் பேசி வந்தார்.

பல  சமயங்களில்  எதிரே அவர் பேச்சைக்
கேட்டுக்கொண்டு இருக்கும் பொதுமக்களையே –
முட்டாள்,  முண்டம்,  அறிவில்லாத மடையன்,
காட்டுமிராண்டி  என்றெல்லாம் கூட  உரிமையோடு
திட்டிப் பேசி இருக்கிறார்.

அவர்  மீது பெரும் அன்பு வைத்திருந்த
தமிழ் மக்கள்  யாரும்  அவர்
பேச்சைத்தவறாக  எடுத்துக்கொண்டதே கிடையாது.
மாறாக மக்கள் அதையும் ரசித்தார்கள்.
பல  படித்த  இளைஞர்கள்
திராவிடர் கழகத்தில் இணந்தனர். அறிஞர் அண்ணா,
நாவலர் நெடுஞ்செழியன்,ஈவெகி சம்பத், மதியழகன்,
கலைஞர் கருணாநிதி, பேராசிரியர்  அன்பழகன்
என்.வி.நடராஜன் போன்றவர்கள்
பெரியாரின்  படையை  பலப்படுத்தினார்கள்.துவக்க கால  திமுக  முன்னணி வீரர்கள்

(என்.வி.என்., ஈவிகே சம்பத்,விபிராமன்,கருணாநிதி)


ஆனால்  இவர்களது பேச்சு நடை முற்றிலும்
மாறு பட்டது !   அடுக்கு மொழி,
அலங்கார வார்த்தை விளையாட்டுகள்,
எதுகை மோனையுடன் சொற்கள்,
உணர்ச்சியைத் தூண்டும்  வகையில் –
ஆவேசமான பேச்சு !
அண்ணாவின் உரைகள் – ஆழமாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,   ரசனையுடனும் இருந்தன.
அண்ணா  தன் சொல்லாற்றலால்
அனைவரையும்  கவர்ந்தார் !
அனைவரையும்  அணைத்துச்செல்லும்
பெருந்தன்மையும்,  சாதுரியமும்,
அண்ணாவிடம்  இயல்பாகவே இருந்தது.

தொடரும் ..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜ்ஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, பெரியார் ஈ.வெ.ரா., பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் சட்டை, மதிமுக, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.