சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !

சன் டிவிக்கு  கலைஞர்  கண்டனம்!   வீடியோ கிடைத்தால்
எங்களிடம் கொடு –   நீயே காட்டி    சமுதாயத்தைச்
சீரழித்து விடாதே !


இன்று கலைஞர் பெயரில் வந்திருக்கும்

அறிக்கையிலிருந்து   ஒரு  பகுதி –

——-
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத்
தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள்
எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர்
அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும்
தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்-
தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது.

காட்டப்படும் செய்திகளும், படங்களும்
அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர்
நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும்.
இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடக் கூடாது.
———-

கலைஞர் சுற்றி வளைத்துச் சாடுவதில் வல்லவர்.
எனவே அவர் சொல்ல வந்ததை தமிழ் மக்கள்
நலம்  கருதி சுருக்கமாகத் தலைப்பிலேயே
கொடுத்து விட்டோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சன் டிவி, தமிழ், தினகரன், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், ரஞ்சிதா, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !

 1. vedaprakash சொல்கிறார்:

  சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
  – இந்த செய்தி எங்குள்ளது தெரியவில்லையே?

 2. vimarisanam சொல்கிறார்:

  நேற்றைய தினமணி நாளிதழில் வெளி
  வந்திருக்கும் கலைஞரின் அறிக்கையில்
  இருந்து எடிட் செய்யப்பட்ட வாக்கியங்கள்
  தான் மேலே இருப்பது.

  நான் இடுகையின் கடைசி பத்தியில்
  ஏற்கெனவே சொல்லி இருப்பதுபோல்
  கலைஞர் சுற்றி வளைத்து சொன்ன
  செய்தியை தான் நான் தலைப்பாகக்
  கொடுத்திருக்கிறேன்.

  தலைப்பு மட்டும் தான் என்னுடையது !
  வார்த்தைகள் அனைத்தும் சத்தியமாக
  கலைஞருடையதே தான் !

  (என்னுடைய எடிட்டிங் பணிகளுக்காக உங்களிடமிருந்து
  ஒரு பாராட்டு வரும் என்றே நம்புகிறேன்.)

  நண்பரே,
  உங்கள் வருகைக்கு நன்றியையும்,
  உங்கள் அயராத உழைப்புக்கும், வலைப்பணிக்கும் என்
  பாராட்டுதல்களையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்.

  – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.