சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …


சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ?
நெஞ்சில் துணிவிருந்தால்  -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன்
இந்த இடத்திற்கு …

காவிரிமைந்தன் எழுதுகிறென் –
ஒரு சிறு விளக்கம்.எனக்கு  நெருங்கிய நண்பர்கள்
வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான்
எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள்
விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )!

கிட்டத்தட்ட எங்கள் கருத்து, பார்வை பல விஷயங்களில்
ஒரே மாதிரி தான்  இருக்கும். ஆனால் கோணம் மற்றும்
அணுகுமுறையில் மட்டும் மாற்றம் இருக்கும். அதாவது,
சிலர் மிதவாதிகள், சிலர் தீவிரவாதிகள், ஒரே ஒரு
நண்பர் மட்டும் மிக மென்மையான அணுகுமுறை
உடையவர்.

நேற்று நான் எழுதிய “யாருக்கு என்ன பங்கு…” என்கிற
இடுகைக்குப் பிறகு எங்களிடையே பலத்த விவாதம்
இருந்தது. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை
தோன்றியது. இந்த ஒரே கருத்து வித்தியாசமான
கோணங்களில், அணுகுமுறைகளில் (ஸ்டைலில்) வெளி
வரும்போது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறதே –
இதை நம் வலையிலும் முயற்சித்தால் என்ன என்று !

உடனே செயலில் இறங்கி விட்டேன். இனி என் இந்த
வலையில், சில சமயங்களில் என் வித்தியாசமான
நண்பர்களின் இடுகைகளும் வெளியிடப்படும்.இவற்றில்
வரும் கருத்துக்களில் நிச்சயம் எனக்கு உடன்பாடு உண்டு.
ஆனால் ஏற்கெனவே சொன்னது போல் – அணுகுமுறைக்கு
(ஸ்டைலுக்கு) மட்டும் அவரவரே பொறுப்பு !

தனியாக வலை துவக்கி, பராமரிக்கும் அளவிற்கு
அவர்களுக்கு பொறுமை இல்லாததாலும், அவர்கள்
அணுகுமுறையும் எல்லாருக்கும் பிடிக்கும், ரசிக்கும்
என்பதாலும், இந்தப் பொறுப்பை நான் ஏற்கிறேன்.
(எல்லாரும் அவர்களுக்கு நான் இடும் புனைப்பெயரையும்
ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து விட்டார்கள் – நேரம் வரும்போது
அவர்கள் உண்மைப் பெயரை வெளியிடுகிறேன் !)

—————————————–
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ?
நெஞ்சில் துணிவிருந்தால்  -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன்
இந்த இடத்திற்கு …

( இடுகை – பெரிய குத்தூசி )

ஒரு இளிச்சவாயன் கெடெச்சா ,

அதுவும் நீங்க கேட்டது
கெடெக்கல்லேன்னா, நெனச்சது நடக்கல்லேன்னா,
அம்மணிய  வெச்சு ப்ளு படம் எடுத்து விடுவீங்க …
திரும்ப திரும்ப பிலிம் காட்டுவீங்க ..

தில் இருந்தா அடுத்தாப்ல இங்கே போங்க பாப்போம் !
பிலிம் எடுத்து வுடுங்க பாப்போம் !

….. புரியுது புரியுது. இங்கெ எல்லாம் அம்மிணியெ வெச்சு
ஒண்ணும் பண்ண முடியாது.ஆளாளுக்கு ஆசிர்வாதம்
பண்ணிடுவாங்க ..

சரி –  நிஜம் வழில  பண்ணுங்க ..
என்ன ?….
எங்க ஏரியா உள்ள  வராதேங்கறாங்களா ?

அவங்க கிட்ட ஏங்க சொல்றீங்க.  நீங்க பாட்டுக்கு
ஒங்க  வேலய  ஆரம்பிக்க வேண்டியது தானே ?

.. என்ன அவங்க இல்லையா .. பின்ன யாருங்க சொல்றது ?
.. என்ன .. தொலெவுலேந்து கொரல் கேக்குதா ?
எங்கேந்து  ..  ஓ  வீரபாண்டிலேந்தா ?
அம்மாந்தொலெவுலேந்தா ?
ஏங்க அவங்களுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம் ?

அப்ப  இங்கே ஒங்களால  சமூக சேவை செய்ய முடியாதா ?
அடப்பாவமே !

சரி கெடக்கு விடுங்க !
இங்கிட்டு  போய்ப் பாருங்க .. அம்மணிக்கும் எதாவது
வேல இருக்கும் …சமூக சேவை செய்யலாம்.

– என்ன ? இங்கேயும் முடியாதா ?
ஏனுங்க ?
ஓ கப்பம் கட்றாங்களா ?

என்னங்க இது நீங்க எவ்வளவு ஆர்வமா சமூக சேவை செய்ய
காத்துக்கிட்டு இருக்கீங்க …
ஒரு எடமும் தோதுப்பட மாட்டேங்குது.
இளிச்ச வாயன் வேற எவனும் கெடெக்க மாட்டேங்கறானே !


சரி – பார்டர்  தாண்டி போக  தில்  இருக்கா –  பக்கத்துல  தான்

இதோ –   அம்மா  பகவானே

உள்ளே போனா   அடி விழும்கறீங்களா ?   வாங்கிக்க வேண்டியது

தான்.      TRP  யாவது  கெடெக்குமில்ல  –


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், இரக்கம், ஒளிபரப்பு, கட்டுரை, கலை நிகழ்ச்சி, கோவணம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மிரட்டல், மேல் மருவத்தூர், ரஞ்சிதா, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …

  1. chithiran சொல்கிறார்:

    nalla karuthu anna suntv ku neenga solradu puriyadu….. becoz adu tv chenal ella money kaga mathavangal mathikadha oru kudumba chenal…

  2. hari சொல்கிறார்:

    sun tv ye oru vishayatthai miga adhikam vilambara paduththinaal ullaarththam irukkum! aanaal neengal solvadhaiyellaam thunivillaamal sun tv oliparappaadhadhaal nithti yin seigai niyaayamaa?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ஹரி,

      நித்தியானந்தா சாக்கடையில் உழலும்
      ஒரு பன்றியை விடக் கேவலமானவன்.
      அவனைப் பற்றி பேசுவதோ, எழுதுவதோ வீண்.
      காலம் விரைவில் அவனுக்கு தகுந்த தண்டனையை
      கொடுக்கும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.