யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..


யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி,
நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில்
சொல்லாதவரை  நீங்களும் ….

துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி
விடுகிறேன்.

பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை
மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த
ராஜசேகரன் என்பவன்
ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.

மக்களின் பலவீனங்களையும்,
அறியாமையையும், ஆன்மிகம் என்று சொல்லி வரும்
எவரையும் உடனே நம்பி விடும் பாங்கையும்
பயன்படுத்திக்கொண்டு மிகக் குறைந்த காலத்தில்
கோடி கோடியாகப் பணத்தையும்,சொத்தையும்,
உணர்ச்சி வசப்பட்ட, முட்டாள் பக்தர்
கூட்டத்தையும் சேர்த்துக்கொண்ட சாமர்த்தியசாலி.

எப்படி பிறரின் பலவீனங்களைப் பயன்படுத்தி குறைந்த
காலத்தில் மிக வேகமாக முன்னேறினானோ,
அதே போல்,
தன்னுடைய சொந்த பலவீனத்தால்,கண் சிமிட்டும்
நேரத்தில் அதல பாதாளத்தில் குப்புற விழுந்து
விட்ட அடிமுட்டாள்.

அடுத்து  –
இந்த விஷயத்தை சிறிது ஆழமாகவும், அகலமாகவும்
அலசினால் எழுகின்றன பல கேள்விகள்.

சமூக சேவை, சமுதாய நன்மைக்காக என்று இதில்
ஈடுபட்டதாகக்கூறும் பங்குதாரர்கள் –
மக்களுக்கு இதற்கான பதில்களைச் சொல்ல
கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

1) இந்த அயோக்கியனை 5-6 வருடங்களுக்கு முன்னால்
முதன் முதலாக தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்தி,
வாரா வாரம்  வித்தியாசமான போஸ்-களில்
விதம் விதமான புகைப்படங்களுடன் அதைத் திறந்து வை,
இதைத்திறந்து வை என்று கட்டுரைகளை வெளியிட்டு –

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏமாற அடித்தளம் போட்டது
குமுதம் வார இதழ். இதில் குமுதத்தின்
சொந்தக்காரர்களுக்கும்,
ஆசிரியர் குழுமத்திற்கும் எந்த அளவிற்கு பங்கு உண்டு ?

2) முதன் முதலாக நேற்றிரவு (02/03/2010)ஏகப்பட்ட
ஆரவாரத்துடன்,முன்னறிவிப்புகளுடன் இந்த வீடியோவை
வெளியிட்ட சன் டிவி, படத்தில் தோன்றும் பெண்ணின்
முகம் தெரியாமல் செயற்கையான டெக்னிக்- குகளால்
அதை மறைத்தது. பெண்ணின் பெயரையும் சொல்லாமல்
பூடகமாக, ஆர் என்று ஆங்கிலத்தில் தொடங்கும்
நாலெழுத்து பெயர் கொண்ட தமிழ் நடிகை
என்று மர்மம் காட்டியது.அதற்கான அவசியம் என்ன ?

3) மறுநாள் காலை (03/03/2010) வெளிவந்த
நக்கீரன் இதழில்,முகம் மறைக்காமல், ரஞ்சிதா என்று
பெயரையும் போட்டு அத்தனை புகைப்படங்களும், செய்தியும்
வெளிவந்தன.

4) ஒரு முக்கியமான, அடிப்படையான கேள்வி –
இந்த வீடியோவிற்குச் சொந்தக்காரர், காரணகர்த்தா  யார் ?
நக்கீரன்  இதழா ? இல்லை  சன் டிவியா ?

5) ஒருவர் முகத்தையும், பெயரையும் மறைத்தது ஏன் ?
மற்றோருவர் இரண்டையும் வெளிப்படையாக பிரசுரித்தது
ஏன் ? இரு நிறுவனங்களும்  இரு வேறு நிலைப்பாட்டைக்
கொண்டதன் பின்னணி என்ன ? இரண்டு நிறுவனங்களுக்கும்
ஒரே வீடியோ கிடைத்தது எந்த பின்னணியில் ?

6) இன்று (03/03/2010) மாலை சன் டிவியில்
மறைக்கப்படாத பெண்ணின் முகத்துடன் வீடியோ
ஒளிபரப்பப்பட்டது. ரஞ்சிதா என்ற தமிழ் நடிகை என்ற
பெயர் விவரங்களும் சொல்லப்பட்டன.

7) சன் டிவி நேற்று மிகவும் சிரமப்பட்டு செயற்கையாக
விவரங்களை மறைத்தது ஏன் ? இன்று தானாகவே
வெளியிட்டது ஏன் ?

8) இன்றைய மாலை சன் டிவி செய்தியில் சில புதிய
செய்திகளும் கொள்கை விளக்கங்களும் கூறப்பட்டன –

ரஞ்சிதாவுக்கு வக்காலத்து – “திருமணமான சில
வருடங்களிலேயே கணவனைப் பிரிந்து வாழ வேண்டிய
கட்டாயம்.  சில நண்பர்களின் வழி காட்டுதலின்படி
நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கேட்டார்.
அவர் விரித்த வலையில் விழுந்தார்.”

“இவரைப் போல் வலையில் விழுந்த பெண்கள்
இன்னும் எத்தனை பேரோ தெரியவில்லை “

“இவரைப் போன்ற போலிச் சாமியார்களிடமிருந்து
மக்களை விடுவிக்கும் சமூக சேவையாக சன் டிவி
இந்த வீடியோவை வெளியிடுகிறது “

(சன் டிவி கொடூரமான நெடுந்தொடர்களையும்,
ஆபாசம் ததும்பும்  நடனப்போட்டிகளையும் நிறுத்தி
விட்டால் – அதுவே சமுதாயத்திற்கு செய்யும்
பெரிய சேவை தான் !)

– இப்போதும் இந்த வீடியோவை எடுத்தது யார் ?
சொந்தக்காரர்கள்  சன் டிவியா இல்லை நக்கீரனா –
சொல்லவில்லை !

9) அடுத்து மிக மிக முக்கியமான விஷயம்.
வலைத்தளம் முழுதும் இந்த வீடியோ பரவலாகக்
கிடைக்கிறது. யார் வேண்டுமானாலும், எப்போது
வேண்டுமானாலும்  பார்க்கலாம் – பாருங்கள் !

பார்க்கும்போது, மிகத்தெளிவாக நமக்குப் புரிகின்ற
விஷயம் –

போலிச்சாமியார், ஏதோ ஒரு வித போதையில்,
கட்டிலில் படுத்துக்கிடக்கிறார்.அந்தப் பெண்
தானாகத்தான் கட்டிலில் வந்து உட்காருகின்றார்.
காலைப் பிடித்து அமுக்கி விடுகிறார்.

பின்னர் ஒருவிதமாக வேட்டிக்குள்
கையை விடுகிறார். சாமியாரின் கன்னத்தை
வருடுகிறார்.
சாமியாரை அந்தப் பெண் தான் முத்தம் இடுகிறார்.
கட்டிப் பிடிக்கிறார். சாமியாரின் மீது அந்தப் பெண்
தான் தானாகவே படுக்கிறார்.
இத்தனைச் செயலகளிலும் அந்தப் பெண்
தான் சுயமாக ஈடுபடுகிறார். ஒரு அசட்டுச் சிரிப்புடன்
அந்த போலி அணைத்துக் கொள்கிறது. பதிலுக்குக்
கட்டிக்கொள்கிறது.

பெண்ணிச்சை கொண்ட ஒரு
ஆண்மகன் எப்படி செயல்படுவானோ அப்படி செயல்
படவில்லை அந்த போலி. ஏதோ ஒருவித
போதையில் இருப்பது தெரிகிறது !

அவர்களுக்குள் எந்த வன்முறையும் இல்லை. நன்கு
பழகிய ஒரு தம்பதிகளுக்குள்  இருக்கும் ஒரு வித
அந்நியோன்னியம் தான் தெரிகிறது. இருவரும் முழு
ஆடையுடன் தான் இருக்கிறார்கள்.மூன்று வெவ்வேறு
நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் (வெவ்வேறு
உடைகள் ) எதிலும் உடலுறவு காட்சிகள்
எதுவும் இல்லை.

அந்தப் பெண்ணின் செயல்களை மீண்டும் ஒரு முறை
முதலில் இருநது கவனியுங்கள் -வீடியோ எடுக்கப்படுவது
அந்தப் பெண்ணுக்குத் தெரியும் என்பது வெளிப்படுகிறது.
தான் எநதச்செயலில் ஈடுபடும்போதும், போலியின்
முகம் அல்லது அடையாளம் வீடியோ காமிராவில்
நன்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்கிற அந்த
பெண்ணின் எண்ணம்,  ஆர்வத்துடன் கூடிய செயல்பாடு
இப்போது நமக்கு நன்றாகவே புரிபடுகிறது –
தெரிகிறது.

யோசித்தால், சில அனுமானங்கள் கிடைக்கின்றன.
நிஜமாகவும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

ரஞ்சிதாவுக்கும் அந்த போலிக்கும் நீண்ட நாட்களாகவே
கணவன், மனைவி போன்ற ஒரு உறவு, நெருக்கம்
இருந்திருக்கிறது. இந்த நெருக்கத்தைப் பற்றித் தெரிந்து
கொண்ட சன் டிவி  அல்லது நக்கீரன் குழுமத்தினர் –
ரஞ்சிதாவுக்கு  பொருளாசை (மேற்கொண்டு எதாவது
ஆசைகளும் இருக்கலாம் ) காட்டி, போலியுடன்
நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்துத்தரும்படி
கேட்டிருக்கலாம்.

அப்படி எடுக்கக்ப்பட்ட வீடியோவாக இது இருக்கலாம்.
போலி சாமியாரின் படுக்கையறைக் காட்சிகளை
ரஞ்சிதாவின் துணையுடன்  எடுத்திருப்பதை நன்றாகவே
ஊகிக்க முடிகிறது.

10) இதைச் செய்தது யார் ? சன் டிவியா அல்லது
நக்கீரனா ? நக்கீரனானால் ஏற்கக்கூடும். ஆனால்
அவர்கள் எப்படி, ஏன் இதை சன் டிவிக்கு கொடுத்தார்கள்  ?
காசுக்காக  என்றால் – நோக்கம் தவறு தானே ?
இங்கே லட்சியம் தோற்றுப்போகிறதே ?

11) ஆனால் செய்தது சன் டிவியாக இருந்தால்,
இதற்கும் ச்மூக சேவைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்று தான் சொல்ல வேண்டும். பகுதி, பகுதியாக
வெளியிடுகின்றார்கள். திடுக்கிடும் அறிவிப்புகளைச்
செய்கிறார்கள். அலட்டிக் கொள்கிறார்கள்.
முக்கியமாக – ரஞ்சிதாவை, பாதிக்கப்பட்ட அப்பாவிப்பெண்
போல சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்.

12) ரஞ்சிதாவிற்கும் போலிக்கும் 4-5 வருடங்களாக
கணவன், மனைவி போன்ற உறவு இருந்திருக்கும்
பட்சத்தில்,சன் டிவியில் இருந்து கிடைக்கும்
பணத்திற்காக அந்த நபரை இப்படிக் காட்டிக்கொடுப்பது
எவ்வளவு கேவலமான  செயல் ? பணம் வாங்கிக்கொண்டு
பிளாக்மெயில் செய்வது எப்படி சமூக சேவையாகும் ?

மேலே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் எல்லார் மனதிலும்
தோன்றக்கூடியவை தான்.
நான் அவைகளை  கோர்வையாக்கி இருக்கிறேன்.

இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து
எப்போது சரியான விளக்கம் கிடைக்கிறதோ – அதுவரை
அவர்களின் செயல்பாடுகளும்  நம்மைப்பொறுத்தவரை
சந்தேகத்திற்குரியவை தான்.  சரி தானே நண்பர்களே  ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, குமுதம், கோவணம், சினிமா, சின்ன வயசு, தமிழ், நடிகர் சஙகம், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், ரஞ்சிதா, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..

 1. கொழுப்பு சொல்கிறார்:

  என் மனதில் உள்ள அத்தனையும் இதுதான்.

  இது திட்டமிட்டு எடுக்கப்பட்டது.

  ” சுயநலம் போர்வையில் அலையும் பணப்பேய்”

  சாமியாரின் சுயநலம் – ஆன்மீகம் மூலம் மக்களை ஏமாற்றுவது..

  ரஞ்சிதாவின் சுயநலம் – வாழ்க்கையின் ஏமாற்றம், பழி வாங்கும் செயல் மற்றும் பணம்.

  நக்கீரன் – பணபரிவர்த்தனையில் தோல்வி அல்லது ரஞ்சிதாவுடன் பண பரிவர்த்தனை ஒப்பம்.

  சன் டிவி – பணவ்ர்த்தனையின் மூலதனம், சாமியாரை ஏதோ ஒரு காரணத்திற்க்காக பழிவாங்கும் நடவடிக்கை.

 2. vedaprakash சொல்கிறார்:

  அருமையான அலசல்!

 3. riyas சொல்கிறார்:

  உண்மையில் மடங்களில் பெண்கள் செல்வது தவிர்த்துக்கொள்வது எல்Nhருக்கும் நல்லது

 4. riyas சொல்கிறார்:

  பெண்கள் நினைத்தால் யாரையும் கவிழ்க்கலாம். ஒருநாளைக்கு சா………வா அவரும் மாட்டுவாரு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.