இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் ..


இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் !
தூக்கிலே போடுங்கள்  ..

மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான்
பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து
நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை –
கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

முக்கியமாக -சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு –
குற்றங்களுக்கு, உடனடியான
கடுமையான தண்டனை.

திருட்டுக் குற்றங்களுக்கு கையை வெட்டுவது கொடுமை
இல்லையா  என்பார்கள்  சிலர்.  இல்லவே இல்லை.

அந்த தண்டனையின் பயம் தான் குற்றம் செய்வதிலிருந்து
மனிதனைத் தடுக்கிறது.  நிச்சயம் தண்டனை கிடைக்கும்
என்றால் – நம் ஊரின் மானங்கெட்ட  ஊழல் அமைச்சர்கள்
இப்படி  இருப்பார்களா ?

இங்கே கொள்ளை அடிக்காத அதிசய அமைச்சர் யார் ?
இது வரை தண்டிக்கக்ப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள்
எத்தனை பேர் ?

கிலோ 13 ரூபாய்க்கு விற்ற சர்க்கரைக்கு இன்று
40 ரூபாய்  கொடுக்கிறோமே – யாரால், எதனால் ?

எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில்
பேசியதன் கருத்தென்ன ?

நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருந்தால் –
வெளிநாடுகளுக்கு
விற்கலாம். ஆனால் நமக்கே தேவை என்கிறபோது ?

நமக்கே பற்றாக்குறை – உற்பத்தி குறைவு – விலை
ஏறிக்கொண்டே போகிறது என்கிற நிலையில் –

ஒரு பக்கம் கிலோ 12.50 ரூபாய் என்கிற விலைக்கு
வெளிநாடுகளுக்கு  சர்க்கரையை விற்று விட்டு, அதே
சர்க்கரையை கிலோ 36 ரூபாய்க்கு வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு 40 ரூபாய்க்கு
விற்றால்  என்ன அர்த்தம் ?

டிசம்பர் 2008-ல்  30 கோடியாக இருந்த 33 சர்க்கரை
ஆலைகளின் லாபக் கணக்கு டிசம்பர் 2009-ல்
901 கோடியாக எகிறியது எப்படி ?
(இது அதிகாரபூர்வமான  தகவல் )

கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயி, உற்பத்திச்
செலவு கூட கிடைக்காமல்  திண்டாடுகிறான்.
உபயோகிக்கும் பொது மக்களோ விலையேற்றம் தாங்க
முடியாமல் தவிக்கின்றனர்.

இடையிலுள்ள ஆலை முதலாளிகளும்,தரகர்களும் இப்படி
கொள்ளை அடிக்க முடிவது யாரால் ? எப்படி ?

இதைச் செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர் யார் ?
சர்க்கரை ராஜா என்று சரத் பவாரை – சுஷ்மா
வேண்டுமானால்
செல்லமாகச் சொல்லலாம்.

மானங்கெட்ட அந்த மனிதரும் தொலைக்காட்சியில்
நேரடியாக ஒளிபரப்பாவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல்
சிரித்துக்கொண்டே ரசிக்கலாம்.

நாம் அப்படி எல்லாம் சொல்லத் தயாரில்லை.
நாம் அரசியலவாதியும் அல்ல.

நமக்குத் தெரிந்தது வெளிப்படையான பேச்சு தான்.
நாம் சொல்வது இவ்வளவு தான் –
” தூக்கிலே போடுங்கள் இந்தக் கொள்ளைக் காரர்களை .
அப்போது தான் பயம் வரும். இந்தக் கொள்ளைகளுக்கு
எல்லாம் ஒரு முடிவும் வரும் “

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், சர்க்கரை ராஜா, தமிழ், திருட்டு, தூக்கிலே போடுங்கள், நிர்வாணம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மொத்த விலை, லாபம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.