குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !

குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை
கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !

(முதல் இடுகையைத் தான்  எழுதினேன் –  முடிப்பதற்குள்

குகநாதனின்  அறிக்கை வெளி வந்து விட்டது  ! எனவே ……. )

அஜித், சினிமாவை விட்டே வேண்டுமானாலும்
போய் விடுகிறேன் – ஆனால் மன்னிப்பு மட்டும்
கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

ரஜினியோ இதைக் கொசு அளவிற்குக் கூட
மதிக்கவில்லை !

இந்த நிலையில் –
நாளை நடிகர் சங்க கூட்டம் கூடவுள்ள வேளையில் –
இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க வேண்டிய
அவசரம் கலைஞருக்கு ஏற்பட்டு விட்டது.
பாவம் எத்தனதான் அறிக்கை விடுவார் அவர் !

இன்று வெளியிட்டுள்ள ஒரு நீண்ட அறிக்கையில் –
தனக்கு திரையுலகினர் இதுவரை எடுத்த விழாக்கள் பற்றி
பெருமையுடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி,
அஜித் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும்
கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது அறிக்கையின் சில முக்கிய பகுதிகளும் –
அதையொட்டிய நமது எண்ண  ஓட்டங்களும் கீழே –

தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்துவரும் பல
பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை –
ஏமாற்றம் – அகந்தை எனும் தீமைகளாகும்.

(அகந்தை – அஜீத்துக்கு- சரி புரிகிறது !
ஆனால் அசூயை & ஏமாற்றம் -யாருக்கு ?கலைஞருக்கா ?
தனக்குத் தானேயா இப்படிக் போட்டுக்கொடுப்பார் ?
சொந்த செலவிலேயே சூன்யமா ? )

கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ
விழாக்களை எடுத்துள்ளனர்.

(ஆனால் பட்டியலிட்டுப்  பார்த்தால் – 10- 12
வருடங்களுக்கு முன்னர் நடந்தது தான் ஞாபகம்
வருகிறது ! )

கடற்கரையில் 14-4-1996 அன்று எனக்கு
கலையுலகப்பொன் விழாவினை கோலாகலமாக தம்பி
விஜயகாந்த் மற்றும் கலையுலகச்செல்வர்களும்,
தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய விழாவும்
அளித்த பரிசும் அதன் பின்னர்

நினைத்தாலே இன்னமும் என் நெஞ்சை நெகிழ வைக்கும்
இனிய நண்பர் சிவாஜி தலைமையில்
எனது ஐம்பதாண்டு கால கலையுலக பணியை முன்னிட்டும்
75வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே
பொன்விழாவும், பவளவிழாவும் 27-9-1998 அன்று
சென்னை நேரு அரங்கத்தில் நடந்ததும்,
வழங்கிய பரிசுகளும், கண்ணீரோடு
கலந்த வாழ்த்துக்களும் …

(பதவியில் இல்லாத போது நிகழத்திய விழா எதுவும்
சட்டென்று நினைவிற்கு வர மாட்டேனென்கிறதே –
செயலாளர் சண்முகநாதனுக்கு ஞாபக மறதி
அதிகமாகி விட்டது !ஆனால் என்ன செய்வது
ஓய்வு கொடுத்து வெளியே  அனுப்பினாலும் ஆபத்து )

குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு
அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய
கருப்புப்பொட்டு வைத்து
அனுப்புவதை பார்க்கிறோமே, அதைப்போன்றதொரு
பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை

(ஓ – அப்படியானால் அஜித்தின் பேச்சு திருஷ்டிப்
பொட்டு தானா ? ஆனால் யார் அந்த பொட்டு வைத்த
புண்ணியவதி ? )

பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம்
முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல
ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.

(அஜித், ரஜினி பேச்சைப் பெரியதாக்கியது குகநாதன்,
ராமநாராயணன் & ஜாக்குவார் தங்கம் நாடார்
கம்பெனி  என்று தான் நாம் நினைத்திருந்தோம்  !
அஜித் பேச்சை அவரே பெரியதாக்கி விட்டாரோ ?
இப்போது தான் புரிகிறது நமக்கு  )

பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம்
புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று!

(எந்த வாணம் – அஜித்தையும் ரஜினியையும் மிரட்ட
இவர்கள் விட்ட புஸ்வாணமா ?)

இந்த கடிதத்தின் நோக்கத்தையும், இதில் இடம்பெற்றுள்ள
கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர்
மாத்திரமல்ல;
விழாவினை முன்நின்று நடத்தியவர்களும்,
அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து

இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம்
விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு
காப்பார்களேயானால், அது அவர்கள் நடத்திய விழா
தந்த மகிழ்ச்சியை விட
பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும்

(கலவரத்தைத் துவக்கியவரே முடித்தால் தான்
இது முடியும் என்பதை ஏற்கெனவே
எல்லாரும் உணர்ந்து விட்டார்கள். உங்கள் அறிக்கைக்காக
தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்)

—–
(எங்கே குகநாதனை இன்னும் காணோம் ?)

இதோ வந்து விட்டார் குகநாதன்.
இதோ  அவரது இன்றைய அறிக்கை –
(நடிகர் சங்கம் கூடும் முன் வெளியிட்டாக வேண்டுமே !)

“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர்
கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம்.

திரையுலகினரை விமர்சித்தவர்களை(பொட்டு வைத்த
அஜித்தை, ரஜினியை ) கண்டித்து இன்று
வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம்.
அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம்.
ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க
மாட்டோம். (அந்த உரிமை பிதாமகருக்கு மட்டும்
தான் உண்டு )

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு
செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து
வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட
மனக்கசப்பும் அகன்று விட்டது.

(பிதாமகர்  சொன்னால் அஜித், ரஜினி காலில் விழவும்
தயங்க மாட்டோம் ) ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”

(நமது உறுதியான, இறுதியான எண்ணம் –
அப்பாடா – ஒரு வழியாக ரஜினி தப்பித்தார்.
அடுத்த பாராட்டு விழாவிற்கு  அவரைக் கூப்பிட
மாட்டார்கள் !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அஜித் குமார், அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலக நாயகன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைஅரங்குகள், திரைப்படம், நடிகர் சஙகம், நாகரிகம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், ரஜினி, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !

  1. vedaprakash சொல்கிறார்:

    அருமை நண்பரே!

    ஏதோ மற்ற நேரங்களில் அரசியலும் மதத்தையும் பிரிக்கவேண்டும் என்று சொல்வதுண்டு, இங்கு தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் அரசியலையும் சினிமாவையும் பிரித்தால் ஒழிய தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் கிடைக்காது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.