பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ?
அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும்
ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள்
உருவாகி இருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும்
எழுப்புகின்றன –
1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது
கலைஞர் தொலைக்காட்சியா ?
2) நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழாவினை
நடத்த அனுமதி கொடுத்தது யார் ?
3) அதற்கான வாடகையும் முன்பணமும் வழக்கம்போல்
பெறப்பட்டதா ?
4) விழாவிற்கான – வரவேற்பு, விளம்பரங்கள்,
இருக்கைகள்,மின்சாரம், ஒளி, ஒலி அமைப்புகள்,
போக்குவரத்து, சாப்பாட்டு மற்றும் இதர வகை
செலவினங்களை ஏற்றுக்கொண்டது யார் ?
பெப்ஸியா ? அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ?
5)மொத்த செலவு எவ்வளவு ?
யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் ?
6) விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு –
யாருக்காவது பணம்
கொடுக்கப்பட்டதா ? எவ்வளவு ?
7) இந்த விழாவை முன்னிட்டு நன்கொடை/
பண வசூல் எதாவது செய்யப்பட்டதா ? ஆம் என்றால்
இந்த வகையில் சேர்ந்த பணம் எவ்வளவு ?
8) செலவு போக மிகுந்த பணம் எவ்வளவு ?
யாரிடம் இருக்கிறது ?
9) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக கலைஞர்
தொலைக்காட்சியிடம் பணம் எதாவது
பெறப்பட்டதா ? எவ்வளவு ?தொகையை நிர்ணயம்
செய்தது யார் ?
10) இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் தொலைக்காட்சிக்கு
தான் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தது
யார் ?
அதைவிட அதிகம் தொகை கொடுக்க வேறு
தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வந்தன
என்பது உண்மையா ?
11) புதிதாக அரசாங்கம் கொடுத்துள்ள
திரைப்பட நகரில்
நிலம் ஒதுக்கும் முறை பற்றி தீர்மானம் செய்யப்பட்டு
விட்டதா ?
எப்போது ? எங்கே ?
எந்த அமைப்பால் ?
12) எந்த அடிப்படையில் நிலம் ஒதுக்கப்படும் ?
13) பெப்ஸி உறுப்பினர்கள் அனைவருக்குமா ?
அல்லது எதாவது வருமான அடிப்படையிலா ?
கிடைக்கும் நிலம்
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய
போதுமானதா ?
14)திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு
இதில் முன்னுரிமை எதாவது உண்டா ?
15) ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருக்கும்
உறுப்பினர்களுக்கும்
இங்கு நிலம் கொடுக்கப்படுமா ?
16) ஏழை உறுப்பினர்களுக்கு மட்டும் தான்
இந்தப் பயன் போய்ச்சேர வேண்டும்.
ஏற்கெனவே வசதி படைத்தவர்கள்
இதில் நுழைந்தால் நான் சும்மா
பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்-
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் –
என்று ரஜினி சொன்னது எதை வைத்து ?
யாரை நினைத்து ?
17) ரஜினியைக் குறி வைத்து தாக்குபவர்கள் –
அவர் பேச்சால்
பாதிக்கப்படுகிறவர்கள் என்பது உண்மையா ?
18) மேடையிலேயே அஜித் குமார் முதல்வரிடம்
மிரட்டுகிறார்கள் என்று புகார் கூறினாரே ? அப்படி
மிரட்டியவர்கள் யாரென்று முதல்வர் கேட்டறிந்துக்
கொண்டாரா ?
19) முதல்வரிடம் தானே போலீஸ் துறை
இருக்கிறது –
மிரட்டியவர்கள் மீது என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது ?
20) அவசரம் அவசரமாக ரஜினி மீதும் அஜித் குமார்
மீதும் கண்டனம் தெரிவிக்கும் பெப்ஸி தீர்மானத்தில்
நடிகர் சங்கம் சார்பில் ராதா ரவி கையெழுத்துப்
போட்டது எப்படி ? செயற்குழுவைக்கூட கலந்து
ஆலோசிக்காமல்
கையெழுத்துப்போட அவருக்கு அதிகாரம் கொடுத்தது
யார் ?
21) நடிகர்/நடிகைகளின் தன்மானத்தை பாதிக்கும்
அந்த தீர்மானத்தை நடிகர் சங்கத்தின் மற்ற
உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி
ராதா ரவி நம்பினார் ?
22)அல்லது அப்படித்தான் செய்ய வேண்டுமென்று
அவருக்கு எங்கிருந்தாவது கட்டளை வந்ததா ?
23) நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவைகூட்டி
இந்த கண்டன தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க
அவரால் முடியுமா ?
24) அஜித் குமாரும், ரஜினியும் அப்படிப் பேசியதால்
அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பாதிப்பு
உண்டா ? இல்லை மிரட்டியவர்களில் அவரும்
ஒருவர் என்பது உண்மையா ?
தறு தலைகளுக்கு ஆதரவாக செய்தி போட்டு கருத்து தெரிவிக்க சொன்னால் என்ன சொல்ல ” இதுவே அம்மா ஆட்சியா இருந்திருந்தா பேசுன வாயும், தட்டின கையும் கைமா ஆகியிருக்கும். சூப்பர் க்கு இது நல்லா தெரியும். கருணாநிதி தன இனத்தானை தவிர மற்ற இனத்தவர்களுக்கு இளிச்ச வாயனா? என்ன?
sir,
Through envazhi , i visited your site.
Now Reading all your previous posts.
from my childhood , i am against the first family of Tamil nadu… i hate them… but i am not the supporter of the other party..
please keep writing..