தலைவரே – பேட்டியாளரு கெடக்காரு பச்சா !
புச்சு புச்சா ரெட் ஜெயண்ட், க்ளொவ்டு நைன் …
இன்று வெளிவந்துள்ள குமுதம் இதழுக்கு கலைஞர்
(எழுதிக் ? )கொடுத்துள்ள பேட்டி –
1) கலைஞர் பட்டியலில் உள்ள யாராவது அரசியலில்
இருக்கிறார்களா ?
2) விமரிசனம் படங்களைப் பற்றியதா இல்லை
படங்கள் வெளிவரும் விதத்தைப் பற்றியா ?
3)அரசியல் செல்வாக்கையும்,அதனால் கிடைக்கும்
பணபலத்தையும் திரையுலகில் பயன்படுத்த
பட்டியலில் உள்ள யாருக்காவது வாய்ப்பு உண்டா ?
4) யார் யாரோ தயாரித்த படங்களை எல்லாம் –
குத்து மதிப்பாக – கோயம்பேடு மாதிரி –
ஒட்டு மொத்த விலைக்கு
வாங்கி தங்கள் பெயரில் வெளியிட-
இவர்களில் யாருக்காவது சக்தி உண்டா ?
இருந்தாலும் தலைவர் எப்படி சமாளித்தார் பார்த்தீர்களா ?
” தலைவரே -பேட்டியாளர் கெடக்காரு பச்சா !
புச்சு புச்சா ரெட் ஜெயண்ட், க்ளொவ்டு நைன்
னுல்லாம் பேரு வெச்சு சின்ன வயசு பசங்க பேர்ல எல்லாம்
கம்பெனி வந்ததா – மக்கள் என்னவோ நெனைச்சுட்டாங்க.
இப்ப சொல்லிட்டீங்க இல்ல – எல்லாம் நம்ம கம்பெனி தான்
நம்ம வாரிசு தான் – நம்ம மொதல் தான்- னு!
பேசவாங்களா இனிமெ யாராவது ? ஜமாய்ங்க ! “
//யார் யாரோ தயாரித்த படங்களை எல்லாம் –
குத்து மதிப்பாக – கோயம்பேடு மாதிரி –
ஒட்டு மொத்த விலைக்கு
வாங்கி தங்கள் பெயரில் வெளியிட-
இவர்களில் யாருக்காவது சக்தி உண்டா ?//
ஏ.வி.எம் ஐயே கலங்க வச்சவங்கதானே இவங்க…