கலைஞரே குடும்ப விவகாரம்
கொலு மண்டபத்துக்கு
வருவானேன் ?
சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ?
– மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?
ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த
விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம்
என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம்
நிகழ்ச்சியில் கூறுகிறார் !
சரி – இவர் ஓய்வு எடுப்பதப்பற்றி யார் பேசுகிறார்கள் ?
பொது மக்களா ?
முதன் முதலில் இந்த வம்பைத்துவக்கியவரே
கலைஞர் தான்.
அவர் தான் திடுதிப்பென்று சொன்னார் – உலகத்தமிழ்
செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு
எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்று.
அதன் பிறகுஅழகிரி சொன்னார் – 2011 தேர்தலுக்குப்
பின்னரும், கலைஞர் தான் முதல்வர் என்று !
ராஜாத்தி அம்மாள் விகடன் பேட்டியில் சொன்னார் –
தலைவரிடம் நான் 1000 தடவை கண்டிப்பாகக்கூறி
விட்டேன் அவர் ஓய்வு எடுக்கக்கூடாது என்று.
கனிமொழி சொன்னார் – தலைவர் முதல்வராகத்
தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் –
எனவே அவர் தான்
தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று !
இவரை நன்றாகப் புரிந்தவராயிறே ஸ்டாலின் –
எவ்வளவு நாளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் !
கலைஞர் கூறுவதை நம்புவாரா ? ஓய்வுக்கே ஓய்வு
கொடுப்பார் தலைவர் என்று ஒரே போடாகப் போட்டார் !
இப்படி ஆளுக்கு ஆள் -கலைஞர் குடும்பத்திலிருந்து தான்
இதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர –
பொதுமக்கள் அல்ல.
மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் –
எதிர்காலத்தில் எப்போதாவது –
உருப்படியாகத் தேர்தல் என்று ஒன்று நடந்து –
அதில் தி.மு.க. தோற்றால் ஒழிய –
கலைஞர் முதல்வர் நாற்காலியை
விட்டு நகரப்போவதில்லை என்று அவர்களுக்கு
நன்கு தெரியும்.
எனவே அவர்கள் அநாவசியமாக
பேராசைப்படுவதில்லை !
அவதிப்படுபவர்கள் எல்லாம், அரசு அதிகாரிகளும்,
போலீஸ் நிர்வாகமும், கட்சியில் உள்ள இரண்டாம்
கட்ட த்லைவர்களும் தான்.
அடுத்து அதிகாரம் யார் கைக்குப் போகும் என்று புரியாமல்
எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தவியாய்த்
தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தலைவரே – அவர்கள் மீது இரக்கம் காட்டி தெளிவாக,
உறுதியாக, இறுதியாக -எதாவது ஒரு முடிவைச் சொல்லி
விடுங்களேன் !
பாவம் அவர்களும் பிழைத்துப் போகட்டும் !
nethi adi
நாங்களே குழம்பிக் கிடக்கிறோம். எல்லோரையும் அனுஸரித்துப் போகும் நிலையில் இருக்கிறேன். உறுதி எல்லாம் இறுதிக்குப் பின்னாலதான் என்று வசனம் ஒன்று இருப்பது தெரியாதா உங்களுக்கு.
Good blog. Don’t put all in “ITALICS”. It irritates the Eyes.