ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள்
இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது –
லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில்
என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை
என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர்.
நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப்
போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார்
ஷாரீக்கான் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இந்த விவகாரம் பரபர்பபை
ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தீவிரவாத அச்சுறுத்தலைத்
தடுக்கவும் பிரிட்டனின் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான
நிலையங்களில் வெளிநாட்டவர்களை முழு உடல் ஸ்கேன்
செய்யும் முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த ஷாரூக்கானையும் இந்த இரு
விமான நிலையங்களிலும் ஸ்கேன் செய்துள்ளனர்.
ஸ்கேன் செய்யும் போது முழு உடலும் நிர்வாணமாகவே
திரையில் தோன்றும். இதனை
எடுத்துப் பார்த்து பின்னர்
அழித்துவிடுவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது.
ஷாரூக்கானும் இந்த சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர்
அவரது உடலின் ஸ்கேன் படங்களை இரு பெண் அதிகாரிகள்
கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஷாரூக் கூறுகையில்,
“தன் உடலை நிர்வாணமாக ஸ்கேன் செய்த படத்தை, அதுவும்
இரு பெண்களுக்கு முன்னால் பார்ப்பது யாருக்கும்
தர்மசங்கடம்தான். எனக்கும் அப்படி இருந்தது. இருந்தாலும்
அதைக் காட்ட முடியாதே. காரணம் எனது பெயர்.
இந்தப் பெயருக்காகவே அனைத்து விமான நிலையங்களிலும்
நான் தடுக்கப்படுகிறேன். இது பழகிப்போக ஆரம்பித்துவிட்டது.
மத ரீதியான அவமானப்படுத்தல்களுக்கு முன் ஒரு தனி
மனிதனின் சுதந்திரம், உரிமை
என்பதெல்லாம்
பெரிய விஷயமா என்ன…
இந்த ஸ்கேன் படங்களைக் காட்டிய பெண் அதிகாரிகளுக்கு
பதிலாக, அந்த ஸ்கேன் படத்திலேயே எனது கையெழுத்தை
ஆட்டோகிராபாக போட்டுவிட்டு வந்தேன்” என்றார் ஷாரூக்,
கோபமும் நக்கலும் கலந்த
தொனியில்.
பிரிட்டன் மறுப்பு:
ஷாரூக்கான் தனது இந்த அனுபவத்தையே பிபிசி காமெடி
ஷோவிலும் தெரிவித்தார். உடனே ஷாரூக்கானின் இந்த பேச்சுக்கு
பிரிட்டிஷ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த மாதிரி ஸ்கேன் படங்களை யாருக்கும் காட்டுவதில்லை.
இரண்டு நிமிடங்களுக்குள் அழித்துவிடுவதுதான்
அங்குள்ள நடைமுறை. எனவே படங்களை அவர்
பார்த்திருக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஆனால் ஷாரூக் தான் சொன்னது உண்மையே என்றும்
அதற்கு ஆதாரமாக அந்த ஸ்கேன் படங்களின் நகல்களையும்
வெளியிட்டுள்ளார்.
——————————————————–
– மட்டமான விளம்பர தந்திரம் ( cheap publicity )
என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சொல்லுக்கு அப்பட்டமான
உதாரணம் ஷா ரூக் கான்.
காரணங்கள் –
1) ஸ்கேன் செய்தது இவரை மட்டும் அல்ல.
அனைத்துப் பயணிகளும் இதே போல் ஸ்கேன்
செய்யப்படுகிறார்கள்.
2) இதில் மதம் எங்கிருந்து வந்தது ?
3) இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் (ஊர் அறிந்த ஒரு கிறிஸ்தவர் ).
அவருக்கும் அமெரிக்காவில் இதே ட்ரீட்மெண்ட் தான் நடந்தது.
(சுய மரியாதை காரணமாக மீண்டும் அவர் அமெரிக்காவிற்கே
போகவில்லை – தவிர்த்து விட்டார் )
4) உலகம் அறிந்த விஞ்ஞானி, நமது முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாமிற்கு டெல்லி விமான நிலையத்திலேயே இது
போன்ற நிகழ்வு நடந்தது. அவர் மூலமாக இந்தச் செய்தி
வெளிவரவே இல்லை. இவரைப் போல் அவர் அவமானம்
நேர்ந்து விட்டதாக குதிக்கவில்லை.
5) மேலும் இவர் பெண் அதிகாரிகள் நிர்வாணப் புகைப்படத்தை
தன்னிடமே கொண்டு வந்து காட்டியதாகக் கூறுவது
நம்பத்தகுந்ததாக இல்லை.
விமான நிலையத்தில் ஸ்கேனிங் என்பது முடிந்த பின்னர்,
பயணிகள் நேராக விமானத்திற்குள் சென்று அமரவேண்டியது
தான். இவர் மீண்டும் ஸ்கேனிங் அதிகாரிகளைச் சந்திக்கவே
வாய்ப்பில்லை.
மேலும் இவருக்காக நகல் எடுத்துக்கொடுக்க அங்கே ஜெராக்ஸ்
கடையும் வைத்திருந்தார்களோ ? இவரைப் போன்ற புகழ்
பெற்ற ஒரு நபர் விமான நிலையத்தில் இந்த செயல்களை
எல்லாம் செய்ய சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
6) ஸ்கேனிங் ஆண்களுக்குத் தனியாக ஆண்களாலும்,
பெண்களுக்குத் தனியாக பெண்களாலும் தான் செய்யப்படுகின்றது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த முறை மாறாது.
இந்த நிலையில் பெண் அதிகாரிகள்
இவர் நிர்வாணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏது ?
தப்பித்தவறி அவர்களாகவே, வேண்டி விரும்பிப் பார்த்தாலும் (!),
நகல் எடுக்கும் வாய்ப்பும், அதைப் பின்னர் இவரிடமே
கொண்டு வந்து காட்டி ஆட்டோகிராப் வாங்கவும்,
பிறகு இவருக்கும்
ஒரு நகல் போட்டுக்கொடுக்கவும் சந்தர்ப்பம் ஏது ?
7) இந்த் ஸ்கேன் படத்தில் கூட ஆளை அடையாளம் காண
முடியாதவாறு,முகத்தோற்றம் சற்றும் தெரியாதவாறு தான்
எடுக்கிறார்கள். இவராகப் போய்ச் சொன்னால் தான்
தெரியும் இது உலகப்புகழ் பெற்ற ஷா ரூக் கானின்
நிர்வாணப்படம் என்று !
8) மேலும், உண்மையிலேயெ இவர் தன்மான உணர்வு
உள்ளவராக இருந்தால், நேர்மையாளராக இருந்தால் –
இந்த சூழ்நிலையில் என்ன செய்திருக்க வேண்டும் ?
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம்,
ஸ்கேன் செய்யும் இடம் எடுக்கப்படும் ஸ்கேன் படங்களை
நகல் எடுத்து வெளியே கொண்டு வரும்
அளவிற்கு பாதுகாப்பற்று உள்ளது – இதைத் தவிர்க்க
ஆவன செய்யுங்கள்
என்று தானே கூறி இருக்க வேண்டும் ?
9) இவரின் உள்நோக்கம் நன்றாகவே தெரிகின்றது –
மட்டமான முறையில், இன உணர்வுகளைத் தூண்டி விடுவதும்,
கீழ்த்தன்மான முறையில் விளம்பரம் பெறுவதும் தான் என்று.
இவர் போன்ற நபர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.
பொதுவாகவே பிரபலங்கள் தங்களின் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரவே விரும்புவார்கள். அது போல் ஒன்று தான் இது.