கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!


கலைஞர் பற்றி  திருமதி
ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

இன்றைய தினம் கலைஞரின்  துணைவியார்  திருமதி
ராஜாத்தி அம்மையார்  அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின்
விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில
பகுதிகளும்  அதை ஒட்டி நமது எண்ணங்களும –

கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு
பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த
முதல்வர் ஸ்டாலின் தான் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் வரும் தேர்தலிலும் கலைஞர் தான் முதல்வர்
என்று அழகிரி சொல்லி இருக்கிறாரே –
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

பதில் -அடுத்த முறையும் கலைஞர் தான் முதல்வர்.
அதைத்தான் நானும் விரும்புகிறேன்.இப்போது தான்
அழகிரி சொல்கிறார்.நான் பல வருடங்களுக்கு முன்பே
சொல்லி விட்டேன்.

நம் எண்ணம் -இவ்வளவு  நாட்களாக முக்கியமான
முடிவுகளை எல்லாம்  கலைஞர் தான் எடுக்கிறார் என்று
பைத்தியக்காரத்தனமாக  நினைத்திருந்தோமே !
இப்போது தான் தெரிகிறது முடிவுகளை எல்லாம்
எடுப்பவர் யார் என்று !

கேள்வி -ஆனால் அரசியலில் இருந்தே ஓய்வு பெறப்
போவதாக கலைஞரே அறிவித்திருக்கிறாரே ?

பதில் – இது   பத்தி தலைவர் கிட்ட ஆயிரம் தடவைக்கு
மேல் பேசி இருக்கேன். இருக்கிற காலம் ( ! )
வரையில் நீங்க தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும்
என்று. ….அரசியலில் இருந்து ஓய்வு பெறாமல் அவர்
உழைக்க வேண்டும்  என்று மக்கள் விரும்புகிறார்கள்.
அதை நிச்சயம் தலைவர் ஈடேற்றுவார் !

நம் எண்ணம் – அப்படியா  மக்கள் நினைக்கிறார்கள் ?
மக்களில் ஒருவராக இருந்து கொண்டு இது கூடத்தெரியாமல்
இருக்கிறோமே !

இது நாள் வரையில்,கலஞரின் துணைவியாரும்,
கனிமொழியும், அழகிரியும் மட்டும் தான் அப்படி
நினைக்கிறார்கள் என்று
எல்லாம் தெரிந்தவர் போல்  நினைத்திருந்தோமே !

ஒரு வேளை ஸ்டாலின் கூட
அப்படித்தான் நினைக்கிறாரோ ?

கேள்வி -கலைஞர் தேர்தல் பிரசாரம் கிளம்பும்போதெல்லாம்
ச்.ஐ.டி. காலனியில் இருந்து ( திருமதி ராஜாத்தி
அம்மையாரின் இல்லத்திலிருந்து )  தொடங்குகிறாரே..
என்ன காரணம் ?

பதில் – எங்க கல்யாணம் நடந்த இரண்டு மாசத்திலேயே
அவர் பொதுத்துறை அமைச்சர் ஆனார்.(என் ராசி ?)
எல்லாமே இந்த வீட்டில் இருந்தபோது நடந்தது.(! ?)
(அதனால்) தேர்தல் பிரசாரத்துக்கு இங்கே இருந்து தான்
தொடங்குவார். அண்ணாவுக்குப் பிறகு தலைவர்
பொறுப்புக்கு வந்த பிறகு … அது இன்று வரையில்
தொடருது.

நம் எண்ணம் – நாம் நிச்சயம் வடிகட்டிய  மடையர் தான்.
கலைஞரின் உழைப்பினாலும், கொள்கைப் பிடிப்பினாலும்,
மக்கள் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையாலும்,
அன்பினாலும்  தான் அவர் இது வரை ஜெயித்துள்ளார்
என்று அல்லவா நினைத்திருந்தோம் !

பகுத்தறிவாவது – வெங்காயம் !
திருமதி ராசாத்தி அம்மாளின் ராசியான வீட்டிலிருந்து
துவக்குவதால் தான் எதிலும் கலைஞர் வெற்றி பெறுகிறார்
என்பது இப்போது தான்  விளங்குகிறது !

இந்தப் பேட்டியிலேயே கலைஞரின் மஞ்சள் துண்டு
மகிமையைப் பற்றியும் அம்மையார் விளக்கி இருந்தால்
இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போயிருக்குமே !
விகடன் நிருபர் அவசரப்பட்டு பேட்டியை முடித்து
விட்டாரே !

திருமதி ராஜாத்தி அம்மையார்  இது போல் அடிக்கடி
பேட்டி கொடுத்து மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்தால்  (நமக்கு ? ) நல்லது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

 1. vedaprakash சொல்கிறார்:

  முன்பே பல தடவை நான் ஆங்கில கட்டுரைகளில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். http://www.indiainteracts.com ல் இருக்கும் என நினைக்கிறேன். நாடாத்தூர் நம்பி முன்பு அவருக்கு வேண்டிய சோதிட நண்பர். அவ்வப்போது ஆலோசனை கேட்பார். பிறகு ஆஸ்தான ஜோதிடராக அ. கணேசன் உள்ளார். கோபாலபுர இல்லத்திலேயே சாந்தி ஹோமம் எல்லாம் நடந்திருக்கிறது. ஊரை ஏமாற்றி, குறிப்பாக இந்துக்களுக்கு துரோகம் செய்யும் ஜீவிகளில் / வியக்திகளில் / பிறவுகளில் இதுவும் ஒன்று. http://www.indiainteracts.com

 2. Surendran சொல்கிறார்:

  தமிழ், பகுத்தறிவு என்பதெல்லாம் ஊருக்குத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். என்ன இருந்தாலும் ராஜாவைப்பற்றி ராணி சொல்லும்போது சுவையாகத்தானே இருக்கும்…

 3. கரிகாலன் சொல்கிறார்:

  இராசா யாரு? இராணி யாரு? கருணாநிதி இராசான்னா இராணி தயாளு அம்மாதான். இந்த அம்மா அந்தப்புறத்து….

 4. chollukireen சொல்கிறார்:

  தானும் பவர் புல்தான் என்று ராஜாத்தி அம்மாள் காட்டிக் கொள்ள வேண்டாமா. அடுத்து தயாளு அம்மாள் பேட்டி வந்தால் பர்ஸண்டேஜ் தெரியும். மிகவும் முக்கியமான விஷயங்கள் எல்லாம் இவர்கள் எடுக்கும் முடிவுகள்தானா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.