சட்டம் செய்யத்தவறினால் …..


சட்டம்  செய்யத்தவறினால் …..

ருசிகா என்கிற   14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு
உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு
தூண்டிய   அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள்
ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் –

18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத
சிறைத்தண்டனை  தீர்ப்பு.

அதிலும் அப்பீல் செய்து  ஜாமீனில் வெளிவந்த சாமர்த்தியம் !

விளைவு – இன்று  நீதிமன்ற வாயிலில், அனைத்து
ஊடகங்களின்  முன்னிலையிலும், 23 வயது வாலிபரால்
முகத்தில் கத்திக்குத்து.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று
சிலப்பதிகாரத்தின் மூலம்  அன்று உரைத்தார்
இளங்கோவடிகள்.

சட்டம்  செய்யத்தவறினால் – சமுதாயம் செய்யும்
என்கிறான்  இன்றைய வாலிபன் !

சமுதாய  அக்கரையுள்ள, சொரணையுள்ள – அந்த
வாலிபனுக்குப்  பாராட்டுகள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.