அஜீத்தின் பேச்சு !
தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த
பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட
பல்வேறு சலுகைகளை,
முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு
நன்றி தெரிவிக்கும் வகையில்,
முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின்
சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு
அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான
பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் அஜீத்தின் பேச்சு –
“இந்த விழாவில் முதல்வர் கலைஞர் மீதான அன்பும்,
மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன்.
ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம்
வர வேண்டும் என்று
மிரட்டுகிறார்கள்
ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால்
மட்டும் எதிர்க்கிறார்கள். எனக்கு அரசியலுக்கு
வரவேண்டும் என்ற ஆசை இல்லை.
நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்
அவர்கள்தான் தீர்க்க வேண்டும்.
நடிகர்களால் என்ன செய்ய முடியும் ?
யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை
அனுசரித்துத்தானே செல்ல முடியும் ?”
– பிழைக்கத்தெரியாத மனிதராக இருக்கிறாரே
இந்த அஜித். இவ்வளவு வெளிப்படையாகப்
பேசுபவரை விட்டு வைப்பார்களா
நம் அரசியல்வாதிகள் ?
//பிழைக்கத்தெரியாத மனிதராக இருக்கிறாரே
இந்த அஜித். இவ்வளவு வெளிப்படையாகப்
பேசுபவரை விட்டு வைப்பார்களா
நம் அரசியல்வாதிகள் ?//
அவர் நமக்கு எடுத்துக்காட்டு!! உண்மையாக மனதில் தோன்றுவதை பேசுவதற்கு தைரியம் வேண்டும்!! அஜீத் – திரைக்கு வெளியே உண்மையிலேயே ஒரு ஹீரோ!!!