ஜெயகாந்தன் பற்றி …

( நண்பர் கிருஷ்ணமூர்த்தி  (சுவாசிக்கப் போறேங்க) ,

நண்பர்  ஜிவி (பூ வனம்)   மற்றும்  இதர நண்பர்களுக்காக –

உங்கள்  வலைக்கு தான்  எழுதினேன்.  ஏதோ  டெக்னிகல்

கோளாறு.  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .  எனவே  இங்கேயே

உங்களுக்காக   எழுதுகிறேன். )

உங்களுக்கும் மேலாக  ஜெயகாந்தனின் எழுத்தை
ரசிப்பவன்  நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்
ஜெயகாந்தன் முதல் முதலில் எழுதி இயக்கிய
திரைப்படத்தை அவரே ஊர் ஊராகக்
கொண்டு சென்று  காலைக்காட்சிகளில்
திரையிட்டுக்  காண்பித்த போது இந்த முயற்சி
எப்படியாவது வெற்றி பெறவேண்டுமே என்று ஆவலோடு
வேண்டி விரும்பி கூடவே  அலைந்தவன்
தான் நானும்.

என் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப்
பாருங்கள்.  அவர் எழுத்தை எங்கேயாவது குறை
கூறி இருக்கிறேனா ?

நான் குறை கண்டது ஜெயகாந்தன் என்கிற மனிதரில் தான் !
தன்மானச்சிங்கமாக இருந்த, யாருக்கும்
பணியாதவராக இருந்த ஜெயகாந்தன் –
இன்று கனிமொழியை அண்ணாவுடனும், பெரியாருடனும்
ஒப்பிட்டு பாராட்டிப் பேசும் அளவிற்கு  இறங்கி
வந்து விட்டதைப் பற்றித்
தான்  நான் விமரிசனம் செய்தேன்.

முதுமை காரணமாகவோ, தேவைகள்  காரணமாகவோ
ஜெயகாந்தன்  தன்  நிலை  தாழக்கூடாது.  அவருக்கு
தேவை எதுவாக இருந்தாலும் – ஒரு குரல் கொடுத்தால் –
உங்களைப்போல், என்னைப்போல் ஆயிரம் ஆயிரம்
வாசகர்கள்  இருக்கிறோம் – உதவி செய்ய
என்று  தான் நான் கூறுவேன்.

வாசகர்களிடம் உதவி பெறுவதால் அவருக்கு எந்த
இழுக்கும் வராது. அதிகாரத்தில் இருப்பவரை
அண்டினால்  தானே  ஏளனம்  பிறக்கிறது !

அந்தக் கூட்ட அரங்கிலேயே அவருக்கு நிகழ்ந்த
அவமானம் பற்றிய ஆற்றாமை  தான்
என் அந்தக் கட்டுரை.

என் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு

நன்றி நண்பர்களே.  அடிக்கடி வாருங்கள்.

கருத்துக்களை   பரிமாறிக்கொள்வோம் .

தமிழும் இலக்கியமும்  நம் அனைவருக்கும்

பிடித்தது தானே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஜெயகாந்தன் பற்றி …

 1. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:

  உங்களுடைய பின்னூட்டத்தை என்னுடைய வலைப்பூ ஏற்க மறுக்கவில்லை, மட்டுருத்துவதர்காகக் காத்திருந்தது அவ்வளவு தான்! அங்கே உங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலாகச் சொன்னது இங்கேயும்!

  வாருங்கள் காவிரிமைந்தன்!
  நிறையவே உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!

  உங்களுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட பிறகே ஜெயகாந்தனை, எது எழுத்து என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் விதத்தில் மேற்கோளாகக் காட்ட முனைந்தேன். நீங்கள் அவருடைய அபிமானியாகவும், கூட்டாளியாகவும் இருந்திருக்கலாம், என்னை விட நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கலாம், அதைப் பற்றி எல்லாம் நானோ, ஜீவீ சாரோ எதுவும் பேசவில்லை.

  உங்களுடைய பதிலில் இருந்து, தகுதி இல்லாதவர்களிடம் கையேந்துகிற அளவுக்குத் தாழ்ந்து விட்டாரே என்ற ஆதங்கம் தான் கோபமான வார்த்தைகளில், சிங்கமாக இருந்த ஜெயகாந்தன் என்று உங்களைச் சொல்ல வைத்திருக்கிறதென்று நன்றாகப் புரிகிறது.

  ஜெயகாந்தன் என்ன செய்திருக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல, ஜெயகாந்தனும், எவர் எதிர்ப்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று கணக்குப் போட்டு எதையும் செய்வதாகவோ, பேசுவதாகவோ கூட எனக்குத் தோன்றவில்லை. அப்போதும் கூட, ஜெயகாந்தன் சொன்னது செய்தது சரியா, தவறா என்பதைப் பற்றியோ, ஒரு வாசகராக, அபிமானியாக உங்களைத் தொட்டுக் கூட தனிப்பட்ட விமரிசனம் எதையும் முன்வைக்கவில்லை.

  அவர் தன்னுடைய இயல்பிலேயே இருக்கிறார். அதைச் சொல்வதற்காகத் தான், மாதவராஜ் வலைப் பக்கங்களில் இருந்த அவரது பேட்டியில் ஒரே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும், அதன் பொருத்தம் கருதிச் சொல்லியிருந்தேன். இப்போது கூட ஜெயகாந்தனுக்கு எதிராக மாதர் சங்கங்கள் போர்க்கொடி என்று ஒரு விவாத இழையில் படித்தபோது என் மனதில் பட்டதை மட்டுமே என்னுடைய இன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.