முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !
இன்றைய பத்திரிக்கைச் செய்தி இது –
“பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம்
போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம்
குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது.
எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய
அமைச்சரவை அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு
குடும்பத்திற்கும்
கூடுதலாக 10 கிலோ அரிசியை வழங்க
முடிவு செய்துள்ளது !”
பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம் விலை
ஏறி விட்டதால் அரிசியை கூடுதலாகத் தரப்போகின்றார்களாம் !
எனக்கு ஏற்படும் சந்தேகம் –
1) இவர்கள் கோமாளிகளா ? இல்லை
2) மக்கள் தான் ஏமாளிகளா ? இல்லை
3) இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் மடத்தனத்தை
இப்படி வெளிச்சம் போட்டு வெளிப்படுத்த
விரும்புகின்றார்களா ?