சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்


சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும்

தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை
வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள்
திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த
வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும்
அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண )
வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் !

அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக்
குற்றங்களுக்கு  எல்லாம் வழி கோலியுள்ளது பாருங்கள் !

திரைஅரங்குகள் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றன.
டிக்கெட்டுகளில் உண்மையான விலை போடப்படுவதில்லை.

வரி விலக்கு பெறத்தகுதி இல்லாத படங்களுக்கும்
டிக்கெட் விலையே அச்சடிக்காத டிக்கெட்டுகளுக்கும் கூட
கேளிக்கை வரி வசூலிப்பிற்கு பொறுப்பான அதிகாரிகள்
முத்திரை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

டிக்கெட்டில் ஒரு விலை -ஆனால் கவுண்டரில் வசூலிப்பது
வேறு தொகை !

இரண்டு வாரங்களுக்கு முன்னர்  திருச்சி சென்றிருந்தபோது
சேகரித்த  சினிமா டிக்கெட்டுக்ளின் பிரதிகளை  கீழே
தந்திருக்கிறேன்  பாருங்கள் –

முதலாவது டிக்கெட்டு – காவேரி திரைஅரங்கத்துடையது-
அச்சிடப்பட்டுள்ள விலை முதல் வகுப்பு – 30 ரூபாய்
இரண்டாம் வகுப்பு – 20 ரூபாய்.
அதன் மேல் ரப்பர் ஸ்டாம்ப் அடித்திருப்பது
50 ரூபாயும், 40 ரூபாயும்.
ஆனால்  கவுண்டரில் வசூலித்தது 100 ரூபாயும்,
60 ரூபாயும்.  படம்  3 இடியட்ஸ் (இது இந்தி படமாகையால்
இதற்கு கேளிக்கை வரி உண்டு)(ரப்பர் ஸ்டாம்பில் விலை
போடுவது சட்ட விரோதமானது என்றும் அரசாங்கம்
அறிவித்துள்ளது. ஆனால் கேளிக்கை வரி அதிகாரிகள்
கண்டுக் கொள்ளவில்லை !)

இரண்டாவது டிக்கெட்டு – ரம்பா திரை அரங்கத்துடையது –

இங்கு திரையிடப்பட்ட படம் அவதார் ஆங்கிலத்திரைப்படம்.
இதற்கு வரி உண்டு.
டிக்கெட்டின் பின்புறம் கேளிக்கை வரிக்கான
முத்திரையும் உள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் டிக்கெட்டில்
விலையே போடவில்லை. இது முதல் வகுப்பு டிக்கெட்.

இங்கு வசூலிக்கப்பட்டது – முதல் வகுப்பிற்கு – ரூ.150/-
இரண்டாம் வகுப்பிற்கு – ரூ.100/-

டிக்கெட்  விலையே குறிப்பிடப்படாத வெற்று டிக்கெட்டிலேயே
முத்திரை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் கேளிக்கை வரி
வசூலிக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்.

3வது டிக்கெட் வெங்கடேசா திரைஅரங்கினுடையது.
படம் வேட்டைக்காரன்.
கவுண்டரில் வசூலிக்கப்பட்டது முதல் வகுப்பிற்கு ரூ.200/-
இரண்டாம் வகுப்பிற்கு ரூ.150/-
(வைகுண்ட ஏகாதசி இரவு காரணமாக ஊரில் எக்கச்சக்கமான
கூட்டமோ கூட்டம் – தியேட்டர்காரருக்கு
வேட்டையோ வேட்டை !)

இதில் விசேஷம் என்னவென்றால்  டிக்கெட் அடித்தால்
தானே  கணக்கு காட்ட வேண்டும் என்று –
ரிசர்வேஷன் கூப்பன்
ஒன்றை  மட்டும் கொடுத்தே படத்தை ஓட்டி விட்டார்கள் !

மேலே நடந்திருப்பது அப்பட்டமான சட்டமீறல்.
இவற்றிற்கு அதிகாரிகள் முழுக்க முழுக்க  உடந்தை.
இதில் யார் யாருக்கு என்ன என்ன  பங்கோ –
அவர்களுக்கே வெளிச்சம்!

இதில் முக்கியமான விஷயம் மாநில அரசுக்கு வரவேண்டிய
வருமானம் திட்டமிடப்பட்டு பல நபர்களால் கொள்ளை
அடிக்கப்பட்டு பங்கு போட்டுக்கொள்ளப்பட்டு விட்டது என்பது.

ஆனால் கணக்கே இல்லாமல் இந்த துறையில் உள்ள
பல பேர் வரும்படி ஈட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த
வரும்படியை எங்கே  கணக்கில் காட்டப்போகிறார்கள் ?
எனவே  மத்திய அரசுக்கு போய்ச்சேர வேண்டிய வருமான
வரியையும் சேர்த்தே  ஏய்க்கிறார்கள்.

இதை மத்திய அதிகாரிகள்   மறந்து விட்டார்களா ?
இல்லை  ……. இதிலும்  கூட்டணியா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

  1. விஞ்ஞானி சொல்கிறார்:

    திரை அரங்குகளில் அரசுக்கு போக வேண்டிய பணம் கொள்ளை அடிக்கப் படுகிறது என பலரும் நினைத்த ஒன்று. எந்த அளவு என தெரிந்து கொள்ள சாமானியன் முயல்வதில்லை. உங்கள் பதிவு நம் கண்ணைத் திறக்கிறது. இந்த நிலைக்கு காரணம், கேளிக்கை வரித் துறை அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமே.
    எனக்கு என்னமோ அரசியல் வாதிகளைக் குறை சொல்லும் அளவுக்கு அதிகாரிகளை மக்கள், பதிவுகள், ப்ளோக்குகள் கூட கண்டுகொண்டு, கண்டிப்பது இல்லையோ என தோற்றுகிறது. தேர்தலில் அரசை மாற்ற முடியும்; ஆனால் அதிகாரியை மாற்றுவது மிக கடினம்.
    இந்தியாவின் சாபம் இந்த அரசுப் பணித்துறை. (bureaucracy

  2. durga சொல்கிறார்:

    enna panna mudium sollunga???? namakum theria than seiuthu but yar idha nera kekuranga?????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.