கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !


கமல ஹாசனும்  கறுப்புப்  பணமும் !

” திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக்
கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்?

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில்
போடுவார்கள். அதையடுத்து..?

எங்கெங்கோ  குண்டு வெடிக்கிறது.
மும்பையில், தாஜ்  ஹோட்டலில்  குண்டு  வெடித்தது.
இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு  யாரும்  செக் மூலம்
பணம் கொடுப்பதில்லை.
இந்த மாதிரி தேச விரோத
செயல்களுக்குத்தான் இதுபோன்ற கருப்புப் பணம் உதவுகிறது.
நல்ல காரியத்துக்குப் போய்ச்சேருவதில்லை. உங்கள் தலையில்
விழும் குண்டுகளைத்  தயாரிக்கத்தான் இத்தகைய கருப்புப் பணம்
உதவுகிறது என்று நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.”

–  ஜக்குபாய்  திருட்டு வி.சி.டி. பற்றிய கூட்டத்தில்
கமலஹாசன்  பேசிய பேச்சு தான் மேலே  இருப்பது.

மல்லாந்து  படுத்துக்கொண்டு  எச்சில்  துப்புவது  என்பார்களே
அதற்கு  இதைவிட சிறந்த  உதாரணம்  கொடுக்க முடியுமா ?

கருப்புப் பணத்தைப்  பற்றி  சினிமாக்காரர்கள் –  அதுவும்
கமல் போன்றவர்கள் – பேசுவதைக்கண்டு  மக்கள்
சிரிக்கிறார்கள். அதுவும் மனதுக்குள்ளாக  அல்ல  –

பொது இடங்களில்  –
டீக்கடைகளிலும், சலூன்களிலும் நாளிதழைப் படித்துவிட்டு
வாய் விட்டே சிரிப்பதை நான் கண்டேன்.
தன்  மனதைத்தொட்டு,  மனசாட்சியைத்
தொட்டு  கமல்  கூறட்டும் – அவர் கருப்புப்பணம்
வாங்குவதில்லையா ? வாங்கியதில்லையா ?
அவரது சக நடிகர்கள்  வாங்குவதில்லையா ?

கொடைக்கானலில்  இருக்கும்  300 ஏக்கர்  நிலமும்,
அவரது மற்ற சொத்துக்களும் வெளிப்படையான   கணக்கில்
வாங்கப்பட்டவை  தானா ? அவர் பெரிதும் மதிக்கும்
அவரது தாயின்  மீது  சத்தியமாக  அவரால் தான்
கருப்புப்பணம் வாங்கியதில்லை என்று  கூற முடியுமா ?

அவர் வாங்கிய  கருப்புப்பணம்  எல்லாம்
தீவிரவாதிகளுக்குத்தான்  போனதா ?

பெரிய பட்ஜெட்  படங்களுக்கு எல்லாம் தியேட்டர்காரர்களே
என்ன  விலைக்கு டிக்கெட்டை
விற்பனை  செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா ?

தசாவதாரம்  படத்திற்கு  முதல்  இரண்டு வாரங்களுக்கு
தியேட்டர்களில்  எவ்வளவு ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது
என்பது அவருக்குத் தெரியாதா ? அரசாங்கத்தால்
அனுமதிக்கக்ப்பட்ட கட்டணத்தில் டிக்கெட் விற்றிருந்தால்
போட்ட முதலை எடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது
ஆகி இருக்கும் என்பது அவருக்குத் தெரியாதா ?

திருட்டு வி.சி.டி.தொழிலில்  ஈடுபட்டு இருப்பவர்கள்
யார்  யார் என்பது காவல்துறையினருக்குத்   தெரியாதா ?

முதல்வரின்  படங்களுக்கோ, ச்ன்  குடும்பத்தினர்
வெளியிடும் படங்களுக்கோ
திருட்டு  வி.சி.டி. வந்திருப்பதாக  யாராவது
கேள்விப்பட்டதுண்டா ?

மக்கள்  மடையர்கள்  அல்ல. அவர்களுக்கு
அறிவுரை  கூறும் தகுதி
நிச்சயம்  கமல்  போன்றவர்களுக்கு இல்லை.

குடும்பத்தோடு படம் பார்க்கும் அளவிற்கு
தியேட்டர்களோ  டிக்கெட்  விலையோ  இருந்தால்
மக்கள்  ஏன் திருட்டு வி.சி.டி.
பார்க்கபோகிறார்கள் ?

முதலில் பெரிய நடிகர்க்ள் கோடிக்கணக்கில்  பணம் –
அதுவும்  கருப்புப்பணம் –
வாங்குவதை நிறுத்தட்டும். குறைந்த  செலவில்
நல்ல படங்களை  வெளியிட உதவி செய்யட்டும்.

மக்கள்  குடும்பத்தோடு  தியேட்டர்  செல்லும் நிலையை
உருவாக்கட்டும். ஆளும் கட்சியும், காவல் துறையும்
பாரபட்சம்  இன்றி சட்டத்தை  கடுமையாக
நிலைநிறுத்தட்டும்.

இவர்கள் கூட்டமோ – கூப்பாடோ  போட வேண்டிய
அவசியமே இல்லை  !
திருட்டு வி.சி.டி. தானாகவே ஒழிந்து விடும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, உலக நாயகன், கமலஹாசன், சினிமா, டிக்கெய் விலை, திருட்டு, திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !

 1. Very True. He is not deserved to talk about black money.

  A black sheep talks about black money!

  //கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில்
  போடுவார்கள். அதையடுத்து..?

  எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது.
  மும்பையில், தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தது.//

  What a cruel statement.? He tells symbolically as all terrorists are Muslims.

  He is a true anti-socialist.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.