மீண்டும் மீண்டும் – துக்ளக் !
கடந்த சனிக்கிழமை இரவு
தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர
வைத்த செய்தி –
கலைஞர் அறிவிப்பு –
நான் எனது மிக முக்கியமான பணிகளான
புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும்,
( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது )
அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும்,
(ஏப்ரலில் எதிர்பார்க்கப்படுகிறது )
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையும்,
(ஜூன் கடைசி வாரம் ) முடித்துவிட்டு –
உங்களில் ஒருவனாகி விடுவேன் !
(இதைச் சொன்னது அருந்ததியினர்
சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழாவில் )
இதற்கு பத்திரிகைகளும், மீடியாவும் கொடுத்த
விளக்கம் /தலைப்பு –
கலைஞர் ஜூனில் பதவி விலகுகின்றார் !
கலைஞரை எடை போட தமிழ் நாட்டில்
யாராலாவது முடியுமா ?
ஞாயிறு, திங்கள் – இரு தினங்களும்
எந்தவித எதிர்விளைவுகளும் இன்றி கழிகின்றன.
யாருமே இதைப்பற்றிப் பேசவில்லை.
(வரவேற்றோ, எதிர்த்தோ – எப்படிப் பேசினாலும்,
கலைஞர் தன் நிலையை மாற்றிகொண்டு
விடப்போகின்றாரே – என்று பயம் ? )
செவ்வாய் – ஸ்டாலினிடம் பத்திரிகை நிருபர்க்ள்
கலைஞர் பதவி விலகல் பற்றிக் கேட்டதற்கு,
ஸ்டாலின் பதில் –
கலைஞர் ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர்.
எனவே யாரும் கவலைப்பட வேண்டாம் ( ?)
அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.
அடுத்த கேள்வி – உங்களிடம் பதவியை
ஒப்படைப்பாரா ?
அதிர்ச்சி பதில் – நான் முதல்வர் பதவியை
வகிக்கும் அளவிற்கு தகுதி பெற்று விட்டேனா
என்று அப்பாவிடமே (!)கேளுங்கள்.
இது நாள் வரை ஸ்டாலின் கலைஞரை தலைவர்
என்றே கூறுவது வழக்கம்.(இப்போது தான் முதன்
முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசும்போது
“அப்பா” என்று கூறி இருக்கிறார் !
புதன் – கலைஞரிடம் பத்திரிகை நிருபர்கள்
கேள்வி – நீங்கள் ஜுன் மாதத்தில் பதவி
விலகுவதாக அறிவித்திருப்பது பற்றி –
ஜூன் மாதம் மிகத்தொலைவில் இருக்கிறது.
அதைப்பற்றிப்பேச இப்போது என்ன அவசரம் ?
( இந்தப் பேச்சை அருந்ததியர்
கூட்டத்தில் ஆரம்பித்தவரே அவர் தான் !)
நிருபர்கள் கேள்வி – சிலர் ஸ்டாலினிடம்
முதல்வர் பொறுப்பை அளிக்க வேண்டும் என்றும்,
வேறு சிலர் நீங்களே பதவியில் தொடர வேண்டும்
என்றும் கூறுவது பற்றி –
பதில் – இருவேறு கருத்துக்களையும்
பரிசீலிப்போம் !!!!!!!!!!!!!!!!!
kali muththipooccuya ! ! !