கோத்த பய லும், பொன்சேகாவும்
அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் –
மறைக்கப்படும் உண்மைகள் !
நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர்
பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து
விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார்.
அதன் சாராம்சம் –
“அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை
முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க
அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை
மீறல்களைப்பற்றி விசாரணை செய்ய 04/11/2009 அன்று
அமெரிக்காவில் ஒக்கலஹொமாவில் உள்ள வெளிஉறவுத்துறை
அலுவலகத்திற்கு நேரில் வருமாறு பணித்திருக்கிறது.
இது ஒரு அப்பட்டமான அத்துமீறல். பொன்சேகா இலங்கை
அரசின் ஒரு அதிகாரி. தனது அலுவலில் இருக்கும்போது
நிகழ்ந்த விஷயங்களைப்பற்றி அவர் சட்டப்படி இலங்கை அரசின்
முன் அனுமதி பெறாமல் மூன்றாவது நாட்டிடம் தெரிவிக்க
முடியாது.
எனவே இது குறித்து பொன்சேகாவிடம்
அமெரிக்க அரசு விசாரணை நடத்துவது முறையற்ற செயல் !
இது பற்றி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதருக்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு
உட்படாமல் இருக்க பொன்சேகாவிற்கு இலங்கை அரசு
அனைத்து உதவிகளையும் செய்யும்.”
இதைத் தொடர்ந்து அதிபர் மகிந்த ராஜபக்சே தன் பங்கிற்கு
விடுத்துள்ள ஒரு அறிக்கையில் – தான் தான் முப்படைகளின்
ஒட்டுமொத்த தளபதி என்றும் அமெரிக்க அரசு எதையேனும்
விசாரிக்க விரும்பினால் தன்னிடம் அதைச்செய்யட்டும்
என்றும் சவால் விடுத்துள்ளார் !
இதில் மறைக்கப்படும் மிக முக்கியமான உண்மை ஒன்று
இருக்கிறது. அனேகம் பேர் அறியாத விஷயம் இது !
( நமது செய்தித்தாள்கள்
ஏனோ இந்த குறித்த முழு விவரங்களையும்
ஆராய்ந்து வெளியிடுவதில்லை.)
மகிந்த ராஜபக்சேயும் விசாரிக்கப்படும் நாள்
நெருங்கிக்கொண்டு தான் இருக்கிறது.இன்றில்லா விட்டால்
நாளை இல்லையேல் அதற்கடுத்த நாள் !
கூடிய விரைவில் அவரும் கூண்டில் ஏறும் நாள்
வரத்தான் போகிறது. ஆனால் அதை நிகழ்த்தப்போவது
அமெரிக்க அரசு அல்ல. ஐக்கிய நாடுகள் சபை.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மறைக்கப்படும் உண்மை என்னவென்றால் –
அமெரிக்க அரசு மூன்றாவது நாடு என்ற முறையில்
இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை.
இலங்கை அதிபரின் தம்பியும் பாதுகாப்புத் துறை செயலாளரும்,
இந்த இனப்படுகொலைகளை களத்தில் நின்று
செயல்படுத்தியவருமான கோத்தபய(ல்), தளபதி பொன்சேகா
இருவரும் அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள்.
அவர்கள் இருவரும் இலங்கையிலும், அமெரிக்காவிலும் என
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். (இலங்கையில்
இருக்க முடியாத நிலை வரலாம் – ஓடிப்போக நேர்ந்தால்
இடம் வேண்டுமே என்பதற்காக) முன்கூட்டியே ஏற்பாடாக
இருவரும் அமெரிக்காவிலும் குடியுரிமை
பெற்று வைத்திருக்கிறார்கள்.
இப்போது பொன்சேகாவை அமெரிக்க அரசு விசாரணைக்கு
அழைத்திருப்பது அவர் அமெரிக்க குடிம்கன் என்கிற
அடிப்படையில் தான். எனவே அவரை விசாரணைக்கு
உட்படுத்துவதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.
சட்டப்படி அமெரிக்க அரசு தன்னிடம் குடியுரிமை பெற்றவரிடம்
எப்போது வேண்டுமானாலும், எதைப்பறறி வேண்டுமானாலும்
விசாரிக்கலாம் !இதற்கு உட்பட வேண்டியது
பொன்சேகாவின் கடமை!
இதில் மற்றுமோர் உண்மை என்னவென்றால் –
தளபதி பொன்சேகா குற்றவாளி என்கிற முறையில் விசாரிக்க
அழைக்கப்படவில்லை. 4வது ஈழப்போரில் நிகழ்ந்த
மனித உரிமை அத்துமீறல்களில் கோத்தபய(ல்) ராஜபக்சேயின்
பங்கு என்ன என்றும் இதில் பொன்சேகாவிற்கு தெரிந்த உண்மைகள்
என்ன என்றும் விசாரணை செய்யவே அவர் அழைக்கப்படுகின்றார்.
மறைக்கப்பட்ட மற்றுமோர் உண்மை என்னவென்றால்
செப்டம்பர் திங்கள் கடைசி வாரத்தில் ஐ.நா. கூட்டத்தில்
கலந்து கொள்ள சென்றபோது கோத்தபய லும்
அமெரிக்க அரசால்
மடக்கி அழைக்கப்பட்டு (?)முதற்கட்ட விசாரணை நடந்திருக்கிறது !
இப்போது பொன்சேகா விசாரிக்கப்படுவது அதன் தொடர்ச்சியாகவே !
— தமிழ் செய்திப் பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோள் –
தயவுசெய்து இது போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட
நீங்களும் உதவாதீர்கள்.