யாத்ரிகன் பயணம் – வலைப்பதிவில் இருந்து ஒரு இடுகை
(இதனை எடுத்துப் போட யார் அனுமதியும் தேவை யில்லை )
அசலைப் பார்க்க – http://yatrigan.wordpress.com

இன்னும் என்ன இருக்கிறது ?
முள்வேலி முகாம் தமிழர்களே –
நீங்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து –
ஏமாந்தது போதும்.
பெரும்பாலான தமிழகத்து தமிழர்கள் சொரணை இழந்து
கிடக்கிறார்கள் – பல்வேறு காரணங்களால் !
செயல் புரியக்கூடிய இடத்தில் இருப்பவர்கள்
நம்மிடமிருந்து தொலைதூரத்திற்குப் போய்விட்டார்கள் –
அங்கே எதையோ
சாதித்துக் கொண்டிருக்கிறார்களாம் –
கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய்,
வாய் இருந்தும் ஊமையாய் – அவர்கள்
சாதித்துக் கொண்டிருக்கிறார்களாம் – ஆம் நமக்குப் புரியாத,
நமக்குத் தெரியாத – உலக மகா சாதனை !
ஒப்புக்கொள்கிறோம் –
சிறுபான்மையினரான எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை !
புலம்பலாம் – பேசலாம் – ஆர்ப்பாட்டம் செய்யலாம் –
ஆர்ப்பரித்துக் குரல் கொடுக்கலாம் !
அதற்கு மேலே – மிஞ்சிப்போனால் ஒரு சிலர் உயிர்த்தியாகமும்
செய்யலாம் ! ஆனால் இவற்றால் எல்லாம் உங்களுக்கு
விடிவு – வந்து விடுமா ?
போதும் – மனிதரை நம்பியது போதும் –
இனி உங்கள் விடிவும், முடிவும் இயற்கையிடம் தான் !
இயற்கையே – இவர்கள் இன்னல் இன்னமும் தொடர வேண்டாம் –
இந்த மனிதர்களுக்கு நீயாவது, இனியாவது விடிவைக் கொடு –
ஆம் நீ நினைத்தால் ஒரே விநாடி போதும் !
வா – மீண்டும் ஒரு முறை – ஆழிப்பேரலையாக – சுனாமியாக !
ஒரே நொடியில் அத்தனை பேரையும் அள்ளி அணைத்துக்கொள் !
உன் மடியிலாவது அவர்கள் நிம்மதி பெறட்டும் !!